சனி, 5 ஜனவரி, 2019

கல்வியில் சாதித்த திராவிடம் .. புள்ளி விபரங்கள் காட்டும் உண்மை ..

Suriya Moorthy : எப்படி சாத்தியமானது இந்த இடத்தை அடைவதற்கு எத்தனை
நீண்ட தூரம் பயணித்து வந்திருக்கிறோம் என்று வரலாற்றில் தேடிப்பார்த்தால் கண்கள் கலங்கிப்போகும் கல்வி சில இடங்களில் அறிவுக்கான மூலதனம் பல இடங்களில் வேலைக்கான மூலதனம் இந்த மண்ணில் மட்டும் தான் அது சுயமரியாதைக்குமான மூலதனம் கல்வியை தனிமனிதனின் pride identity ஆக மாற்றுவதற்கு இங்கே நடந்த அரசியலால் சாத்தியப்பட்டது இந்த இடம் இன்னும் கொஞ்சம் இடைவெளி, நாலு அடி சேர்த்து வைத்தால் அதையும் நிரப்பிவிடலாம்<

Bilal Aliyar : திராவிடத்தின் மிக முக்கியமான சாதனையாக கல்வி பரவலாக்களும், அது அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைத்தேயாக வேண்டும் என்ற முனைப்பும் தான்...
இன்று அந்த கல்வியை மூலதனமாக வைத்து தான் சமூக மாற்றத்திற்கான செயல்பாடுகளை தொடர்ந்து செய்தல் அவர் முடிகிறது
இதை பொறுக்க முடியாதவர்களால் தான், நாம் சோர்ந்திருந்த நேரத்தில் மாஃபா பாண்டியராஜன் போன்ற கருங்காலிகளால் நீட் போன்ற மறைமுக உயர்கல்வி மறுப்புக்கான வேலைகளை நிகழ்த்த முடிந்தது.....
தொடர்ந்தும் சமூக நீதிக்கான அரசியலை வலிமையாக பேசும் அண்ணன் BALA அவர்கள் எழுதிய கருத்துகளுடன்...

//பள்ளியில் இருந்து இடையில் விலகி #Schooldropout கல்வி கற்க முடியாமல் போன மாணவ, மாணவிகள் பற்றி இந்திய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜார்க்கண்ட், பிகார், மேற்கு வங்கம் மாநிலங்களில் அதிக அளவில் மாணவர்கள் பள்ளி படிப்பை தொடர முடியாத அவல நிலையில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஒடிசா, #குஜராத் , சட்டீஸ்கர் போன்ற மாநிலங்கள் மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசத்தை விட மோசமான நிலையில் இருக்கிறது. பள்ளிகளில் இருந்து நடுவில் விலகி கல்வி கற்க முடியாமல் போகும் அவலம் இல்லாமல், கல்வி முறையில், சமூக நலத்திட்டங்கள், இலவச திட்டங்கள் மூலம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக, #RolemodelState ஆக #தமிழ்நாடு திகழ்கிறது.....
தமிழகத்தை அடுத்த ஹிமாச்சல் பிரதேசம், மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்கள் இருக்கிறது.
இது திராவிட இயக்க ஆட்சியால் தமிழகத்திற்கு ஏற்பட்ட முக்கிய நன்மை என்று யார் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அது தான் உண்மை.....
சினிமா எடுக்க வந்து இலவசங்கள் தவறு என்று அமர்த்தியா சென்னுக்கே அறிவுரை சொல்ல முயற்சிக்கும் #முருகதாசு, ஆடியோ நிகழ்ச்சிகளில் முதல்வராக நடிக்க முயற்சி செய்யும் #விஜய், தமிழகத்தின் வளர்ச்சி பற்றி சிந்திக்காமல் சதா நேரமும் மதத்தை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும்
#எச்ராஜா, சர்வதேச விவகாரங்களில் முனைவர் பட்டம் பெற்று மோடிக்கு காவடி எடுக்கும் #Worldfocus எடிட்டர் #பாண்டே ஆகியோருக்கு இந்த ஆய்வு சமர்ப்பணம்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக