திங்கள், 21 ஜனவரி, 2019

இந்தியர்களின் பெருகும் சொத்து மதிப்பு:சமத்துவமின்மை..

Nine Richest Indians Now Own Wealth Equivalent to Bottom 50% of the Country
18 new billionaires to the list just last year, taking the total number of billionaires in the country to 119. Their total wealth is higher than the Union budget of India for 2018-2019 (Rs 24,422 billion), the report says.
“A Dalit woman can expect to live almost 14.6 years less than one from a high-caste, மின்னம்பலம் : இந்தியர்களின் சொத்து மதிப்பு: பெருகும் சமத்துவமின்மை!கடந்த ஆண்டு இந்தியர்களின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ள ஆக்ஸ்பாம் நிறுவனம், சமத்தன்மையற்று வளம் பெருகிவருவது இந்த நாட்டின் சமூகப் பிணைப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாக விளங்குவதாகத் தெரிவித்துள்ளது.
உலகளவில் பணக்காரர்கள், ஏழைகளின் சொத்து மதிப்பு குறித்து ஆய்வு நடத்தி வரும் ஆக்ஸ்பாம் நிறுவனம், 2018ஆம் ஆண்டில் இந்தியர்களின் சொத்து மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வறிக்கையில், இந்தியாவில் உள்ள 1 சதவிகித பணக்காரர்களின் சொத்து மதிப்பு கடந்த ஆண்டில் 39 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. பணக்காரர்களிடம் வளம் பெருகுவதாகவும், ஏழைகள் மேலும் சுமையில் சிக்கித் தவிப்பதாகவும், இந்த வேறுபாடு ஜனநாயகத்தையே சீர்குலைக்கத்தக்கது எனவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017, 2018 ஆண்டுகளில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை உலகம் முழுக்க ஒரு கோடீஸ்வரர் உருவாகியிருப்பதாகத் தெரிவித்துள்ளது இந்த ஆய்வு. கடந்த ஆண்டில் உலகத்தின் 26 பெரும்பணக்காரர்கள் வசமிருந்த சொத்துக்களின் மதிப்பு 380 கோடி ஏழை மக்களின் சொத்துக்களுக்குச் சமமாக இருந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டு இந்த எண்ணிக்கை 43 பேராக இருந்துள்ளது.
உலகம் முழுவதுமுள்ள பெரும் பணக்காரர்கள் 7 லட்சத்து 60 ஆயிரம் கோடி டாலர் தொகையை வரி ஏய்ப்பு செய்வதாகவும் இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்கள் பாதிப்பு
உலக அளவில் 23 சதவிகிதப் பெண்கள் ஆண்களைவிட குறைவாகச் சம்பாதிக்கின்றனர் என்றும், 50 சதவிகித ஆண்கள் பெண்களைவிட அதிகமாக வளம் பெற்றுள்ளனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஆண்களை விட 34 சதவிகிதப் பெண்கள் குறைவான அளவில் சம்பளம் பெறுகின்றனர்.
புதிய பணக்காரர்கள்
“கடந்த ஆண்டு மட்டும் இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்களின் பட்டியலில் 18 பேர் புதிதாக இணைந்துள்ளனர். தேசிய அளவில் இந்த எண்ணிக்கை 119ஆக உள்ளது. இவர்களது மொத்த சொத்த மதிப்பு, 2018-19ஆம் ஆண்டுக்கான தேசிய பட்ஜெட் தொகையான 24 லட்சத்து 42 ஆயிரத்து 200 கோடியை விட அதிகம். நாட்டின் மொத்த வருமானம், மத்திய மற்றும் மாநிலங்கள் அளவிலான பொது சுகாதாரம், சுத்தப்படுத்துதல், நீர் விநியோகத்துக்கான தொகையானது, இந்தியாவின் பெரும்பணக்காரரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பை விடக் குறைவு” என்று ஆக்ஸ்பாம் ஆய்வு முடிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாதி வேறுபாடும் காரணம்
இந்தியாவில் சமமின்மை என்பது வர்க்கத்தைப் பொறுத்து மட்டுமல்லாமல் சாதி பேதம், பாலின வேறுபாட்டைச் சார்ந்தும் நீடித்து வருகிறது. “உயர் சாதியைச் சேர்ந்த பெண்ணைவிட, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் ஆயுள்காலம் 14.6 ஆண்டுகள் குறைவாக உள்ளதாகக் கூறியுள்ளது இந்த ஆய்வு.
பொதுத் துறைப் பணிகளைத் தனியார்மயம் ஆக்கியதன் காரணமாக, பாலின சமத்துவமின்மையானது பெண்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிராகவும், இதர விளிம்புநிலைக் குழுக்களுக்கும் நிதியளிப்பதிலும் அநீதி இழைப்பது தொடர்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்துவரும் ஊழல் முறைகேடுகளே, இந்தியாவில் வளம் சமமின்றி அதிகரிப்பதற்குக் காரணமாக உள்ளது.
சுகாதார வளத்திலும் சரிவு
மருத்துவச் சுற்றுலாவைப் பொறுத்தவரை உலகளவில் 5ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை வழங்கி வருகிறது. ஆனாலும், இந்தியக் குடிமக்களுக்கான சுகாதாரத் தரத்தைப் பொறுத்தளவில், உலக அளவில் 195 நாடுகளில் 145ஆவது இடத்தையே பெறுகிறது இந்தியா. ஆயுஷ்மான் பாரத் உட்பட இந்தியாவில் உள்ள எந்த ஆயுள்காப்பீடு திட்டமும் 68 சதவிகித புறநோயாளிகள் மருத்துவச் செலவைப் பூர்த்தி செய்வதில் தோல்வியடைந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.
“இந்தியாவிலுள்ள 1 சதவிகித பணக்காரர்கள் 0.5 சதவிகிதம் அளவுக்குக் கூடுதல் வரி செலுத்தும் தொகையானது, 50 சதவிகித மக்களின் சுகாதாரத்துக்காக அரசு செலவழிக்கும் தொகைக்கு ஈடானது” என்று ஆக்ஸ்பாம் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைய, தனியார் பள்ளிகளில் அந்த எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சுகாதாரம் மற்றும் கல்வியில் தனியார்மயத்தை அதிகப்படுத்தியதன் விளைவாக, அடிக்கடி ஒழுங்கற்று இருக்கும் நடைமுறைகளின் காரணமாக, அளவு கடந்த லாபம் கிடைத்து வருகிறது. படிப்படியாக பள்ளிப்படிப்பை இலவசமாக்கி, சுகாதாரத்துக்கான செலவைக் குறைத்து, சர்வதேச அளவில் கல்வியில் 6 சதவிகிதம், பொதுச் சுகாதாரத்தில் 3.5 சதவிகிதம் ஜிடிபியைப் பெறலாம் என்று இந்த ஆய்வு மத்திய அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.
அரசுக்குப் பரிந்துரை
“சாதி, வர்க்கம், பாலினம், மதம் சார்ந்து பொருளாதார சமத்துமின்மையால் பாதிக்கப்பட்டிருப்பதைச் சரி செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பெரும் பணக்காரர்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள் நியாயமாகச் செலுத்தவேண்டிய தொகையைச் செலுத்தச் செய்து, அந்த பணத்தைப் பொதுமக்களின் கல்வி, சுகாதாரத்தை வலுப்படுத்தப் பயன்படுத்த வேண்டும். அரசாங்கங்கள் எல்லா மக்களுக்கும் பிரகாசமான எதிர்காலத்தைக் கட்டமைக்க வேண்டும்; குறிப்பிட்ட சில பேர்களுக்கு மட்டும் அல்ல” என்று கருத்து தெரிவித்துள்ளார் இந்த ஆய்வை மேற்கொண்ட ஆக்ஸ்பாம் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர்.
நன்றி: தி வயர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக