வியாழன், 3 ஜனவரி, 2019

ரபேல் ஒப்பந்த கோப்புகளை பெட்ரூமில் ஒளித்துள்ள பாரிக்கர்.. ஆடியோ ஆதாரம். காங்கிரஸ் அதிரடி

tamil.oneindia.com  : ரபேல் விமான ஒப்பந்தம் தொடர்பான கோப்புகளை அப்போதைய பாதுகாப்பு துறை அமைச்சரும் கோவா முதல்வருமான மனோகர் பாரிக்கர் மறை
த்து வைத்துள்ளார் என காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக ஆடியோ ஆதாரம் இருப்பதாகவும் கூறியுள்ளது.
விவிஐபிகளுக்கான ரபேல் சொகுசு விமானங்களை கொள்முதல் செய்ய பிரான்ஸுடன் ஒப்பந்தம் இட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. இதுகுறித்து இன்று நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி கேள்விக்கணைகளால் துளைத்தெடுத்துவிட்டார்.
 இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கூறுகையில் பிரான்ஸ் நாட்டுடனான ரபேல் விமானங்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்திட்ட போது மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார்.


ரபேல் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்றால் ரபேல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு கோரிக்கைக்கு மத்திய அரசு ஏன் தயங்குகிறது என்பதற்கான காரணத்தை பிரதமர் மோடி அளிக்க வேண்டும் என்றார். இந்த பேட்டியின் போது சுர்ஜித்வாலா ஒரு ஆடியோ கிலிப்பிங்குடன் வந்தார்.

 சுர்ஜித்வாலா கூறுகையில் அந்த ஆடியோவில் கோவா அமைச்சர் விஸ்வஜித் ராணே மற்றொருவருடன் பேசுவது போல் பதிவுகள் உள்ளன. அதில் கடந்த வாரம் கோவா சட்டசபை கூட்டத்தில் ராணே கூறுகையில் ரபேல் ஒப்பந்தம் தொடர்பான அனைத்து கோப்புகளையும் தான் தங்கியுள்ள பிளாட்டில் படுக்கை அறையில் வைத்துள்ளதாக பாரிக்கர் தெரிவித்துள்ளதாக ராணே எதிராளியிடம் தெரிவித்தார்.

 தற்போது பிரதமர் பதில் சொல்ல வேண்டும். பாரிக்கரின் குடியிருப்பு மற்றும் படுக்கை அறையில் ஒளிந்திருக்கும் ரபேல் ரகசியங்களை இந்த நாடே அறிய வேண்டும். பணத்துக்காக ரபேல் கோப்புகளை பாரிக்கர் வைத்துள்ளார் என்றார். இதனிடையே கோவா அமைச்சர் ராணே கூறுகையில் நான் காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு சென்றால் அக்கட்சி என்னை பழிவாங்க பார்க்கிறது.

 இதனால் போலியாக யாரோ பேசிய ஆடியோவை வெளியிட்டு இது போன்ற கீழ்த்தரமான அரசியலை காங்கிரஸ் நடத்துகிறது. ரபேல் விவகாரம் அல்லது கோப்புகள் குறித்து பாரிக்கர் எதையும் சொல்லவில்லை. காங்கிரஸுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறு பாரிக்கரிடம் கூறியுள்ளதாக ராணே கூறியுள்ளார்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக