tamil.filmibeat.com: புவனேஸ்வர்: ஒடியா நடிகை லக்ஷ்மி ப்ரியா பெஹரா என்கிற நிகிதா மாடியில் இருந்து விழுந்ததில் உயிர் இழந்தார்.
ஒடிஷா மாநிலத்தை சேர்ந்தவர் லக்ஷ்மி ப்ரியா பெஹரா என்கிற நிகிதா. சோரி சோரி மனா சோரி, ஸ்மைல் ப்ளீஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.
அவர் மகாநதி விஹார் பகுதியில் உள்ள தனது தந்தையின் வீட்டிற்கு கணவர் லிபன் சாஹுவுடன் சென்றார். நிகிதா தனது கணவருடன் மொட்டை மாடிக்கு சென்றுள்ளார். அப்பொழுது நிகிதா அலறும் சப்தம் கேட்டு அவரது குடும்பத்தார் ஓடி வந்து பார்த்தபோது அவர் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடந்தார். அவரின் கணவர் மாடியில் நின்று கொண்டிருந்தார். மாடியில் இருந்து விழுந்ததில் நிகிதாவின் தலையில் அடிபட்டிருந்தது.
இதே போன்று முன்பு நடிகர் கமலஹாசனின் மனைவி சரிகாவும் மாடியில் இருந்து விழுந்து பலத்த காயத்துடன் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டிருந்தார் என்பது தற்போது நினைவுக்கு வருவது தவிர்க்க முடியாததே
உடனே நிகிதாவை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக எஸ்.சி. பி. மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரின் உடல்நலம் மோசமானதையடுத்து மீண்டும் ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
போலீஸ் நிகிதாவை அவரது கணவர் லிபன் தான் கொலை செய்துவிட்டார் என்று அவரின் தந்தை சனதன் பெஹரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். நிகிதாவை அவரின் கணவரும், அவரின் பெற்றோரும் சேர்ந்து மனதளவிலும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வந்ததாக சனதன் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
என் மகளை அவரின் கணவர் திட்டமிட்டு கொலை செய்துள்ளார். சம்பவத்தன்று மகளுக்கும், மருமகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து பிரச்சனையை பேசித் தீர்க்க இருவரும் மாடிக்கு சென்றனர். சிறிது நேரத்தில் என் மகள் மாடியில் இருந்து கீழே விழுந்துவிட்டார் என்று நிகிதாவின் தந்தை போலீசாரிடம் தெரிவித்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் லிபனை கைது செய்துள்ளனர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக