புதன், 23 ஜனவரி, 2019

நீட் கொடுரம் ஒழிகிறது , கல்வித்துறை மாநிலத்திற்கு (அனிதாக்களிற்கு சமர்ப்பணம் )

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வாக்குறுதி இது. குறிப்பாக தமிழ்நாட்டுக்கு. NEET என்கிற பெயரில் தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளை கொள்ளையடிக்கும் டில்லி ஏகாதிபத்திய விரிவாக்கத்துக்கு முற்றுப்புள்ளிவைக்கும் அறிவிப்பு இது. தமிழர்கள் ஒவ்வொருவரும் தம் நெஞ்சில் நிறுத்தவேண்டிய வாக்குறுதி இது. மத்திய அரசில் இதை ஏற்க வைப்பதற்குத்தானே தமிழ்நாட்டில் திமுக தேவை. அதுவும் மத்திய கூட்டணி ஆட்சியை  வலியுறுத்தத்தேவையான அளவுக்கு வலிமையோடு.
subaguna.rajan : நீட் கொடுரம் ஒழிகிறது , கல்விதுறை மாநிலத்திற்கு
(அனிதாக்களிற்கு சமர்ப்பணம் )

ராகுல் எனும் இளைஞர் ஏன் நமது பிரதமர் தேர்வு என்பதற்கான நியாயங்களை தொடர்ந்து விரிவாக்கிக் கொண்டே செல்கிறார் .
இதோ ஒரு அறிவிப்பு :
மாநில அரசின் அதிகாரப் பட்டியலில் இருந்து ஒன்றியத்தின் ஆதிக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்ட ‘கல்வியை’ ஆட்சி வாய்ப்பு கிடைத்ததும் ,மீண்டும் மாநிலங்களுக்கு திரும்ப வழங்குவோம் .
இந்த இனிப்புச் செய்தி ஒன்று போதும் . என் வாழ்நாளில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவேண்டுமென இவ்வளவு விரும்புவேனென கனவிலும் நினைத்தவனில்லை. ஆனால் அந்த எண்ணம் வலுவடையும்படியான நிலைப்பாடுகளை தொடர்ந்து எடுத்து வருகிறீர்கள். கூடுதலாக கல்விக்கான ஒதுக்கீடு 6% ஆக்கப்படும் என்பது இன்னும் நற்செய்தி .நன்றி ராகுல் . உங்களை பிரதமர் என முதல் குரல் கொடுத்த தலைவர் தளபதி அவர்களுக்கும் நன்றி.
தொடர்ந்து இதே திசையில் பயணியுங்கள் , இந்தியாவை வலிமையான கூட்டாட்சி ஒன்றியமாக்குவோம் உங்கள் தலைமையில்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக