செவ்வாய், 22 ஜனவரி, 2019

அதிமுக பாஜக கூட்டணி உறுதி...மத்தியமைச்சர் அறிவிப்பு .. தினகரனும் இணைகிறார்?

டிஜிட்டல் திண்ணை: தினகரன் அணியில் இன்னொரு விக்கெட்!மின்னம்பலம் : மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே இன்று புதுவை வந்திருந்தார். அப்போது கூட்டணி தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, தமிழக கூட்டணி நிலவரம் பற்றி வெளிப்படையாகவே பேசிவிட்டார். ‘தமிழகத்தில் பா.ஜ.க. - அதிமுக கூட்டணி என்பது உறுதியாகிவிட்டது. அதிமுகவும், தினகரனும் இணைய வேண்டும். இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் என்பதே எங்களது விருப்பம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்று சொல்லிவிட்டார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கும் என பல தரப்பில் இருந்து சொல்லப்பட்டு வந்தாலும், யாரும் வெளிப்படையாக இது சம்பந்தமாக பேசாமல் இருந்தார்கள். ஒருபக்கம், தம்பிதுரை மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இன்னொரு பக்கம் அன்வர் ராஜாவும் முத்தலாக் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராகப் பேசி வந்தார். அதிமுகவின் செய்தித் தொடர்பாளர்கள் கூட, பிஜேபியை சில இடங்களில் கடுமையான விமர்சனம் செய்து வந்தார்கள். அமைச்சர் செல்லூர் ராஜு ஒருபடி மேலே போய், 40 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிட தயார் நிலையில் இருக்கிறோம் என்று சொன்னார். “

பாஜக தரப்பிலும் யாரையும் நம்பி நாங்கள் இல்லை என தமிழிசை உட்பட பிஜேபியினர் பலரும் தொடர்ந்து பேசி வந்தார்கள். இந்த சூழ்நிலையில்தான் இன்று ராம்தாஸ் அத்வாலே தமிழக கூட்டணி நிலவரம் தொடர்பாகப் பேசியிருக்கிறார். அதுவும் அதிமுகவுடன் தான் கூட்டணி என்பதை உறுதிப்படுத்திவிட்டார். டெல்லியில் கேட்டுவிட்டுத்தான் ராம்தாஸ் அத்வாலே பேசினாரா என்பதை விசாரித்தோம்.
‘கூட்டணி தொடர்பாக இன்னும் பிஜேபி தரப்பில் யாரும் வெளிப்படையாக பேசவில்லை. ஆனால், ஒவ்வொரு மாநிலத்திலும் யாருடன் கூட்டணி என்பது பற்றிய பேச்சுவார்த்தை டெல்லியில் தொடர்ந்து நடந்து வருகிறது. ராம்தாஸ் அத்வாலேவுக்கும் இந்த விவரங்கள் எல்லாம் தெரியும். பிஜேபியை கடுமையாக அதிமுக விமர்சனம் செய்து வந்தாலும் கடைசி நேரத்தில் கூட்டணிதான் என்பதில் மாற்றம் இல்லை. இது மேல்மட்டத் தலைவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதைத்தான் ராம்தாஸ் அத்வாலே போகிற போக்கில் சொல்லிவிட்டார். கூட்டணி தொடர்பாக இனி யாரும் எதுவும் பேச வேண்டாம் என பிஜேபி தலைமையில் இருந்து எம்.பிக்கள், அமைச்சர்கள் என எல்லோருக்குமே உத்தரவு போயிருக்கிறதாம்’ என்று சொன்னார்கள். “ என்பதுடன் அந்த மெசேஜ் முடிந்தது. அதை அப்படியே காப்பி செய்து ஷேர் செய்தது ஃபேஸ்புக்.
தொடர்ந்து மெசேஜ் ஒன்றை டைப்பிங் செய்ய ஆரம்பித்தது.
“அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளராக இருந்தவர் திருவேற்காடு சீனிவாசன். தினகரன் அணியில் செய்தித் தொடர்பாளராகவும் இருக்கிறார். தொலைக்காட்சி விவாதங்களில் தினகரனுக்கு ஆதரவாக அனல் பறக்கப் பேசுவார். எல்லாவற்றையும் தாண்டி தினகரனுக்கு நீண்ட கால நண்பர். தினகரனுக்கு ஆரம்பகாலத்தில் அரசியல் சொல்லிக் கொடுத்தவர்களில் முக்கியமானவர் இந்த சீனிவாசன். தினகரனை நினைத்த நேரத்தில் பார்க்க கூடிய நபர்களில் இவரும் ஒருவர். அப்படிப்பட்ட சீனிவாசனை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கி இருக்கிறார் தினகரன். காரணம், அதிமுகவில் சிலருடன் நட்பில் இருந்தாராம் சீனிவாசன். குறிப்பாக அமைச்சர் பெஞ்சமின் குடும்பத்தில் நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் சீனிவாசன் கலந்து கொண்டிருக்கிறார். அந்தப் படங்கள் எல்லாம் சீனிவாசனின் எதிர் அணியியில் இருப்பவர்கள் தினகரன் கவனத்துக்கு கொண்டு போயிருக்கிறார்கள். உடனே டென்ஷன் ஆனவர், சீனிவாசனை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டார்.
சீனிவாசன் உடனடியாக தினகரனை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ‘எதுக்காக என்னை மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கீங்க?’ என்று கேட்டிருக்கிறார் சீனிவாசன். அதற்கு டிடிவி தினகரன், ‘அதிமுக ஆளுங்க கல்யாணத்துக்கு நீங்க போன போட்டோ எல்லாம் எனக்கு வாட்ஸ் அப்ல வருது. இதுக்கு மேல எப்படி உங்களை பொறுப்புல வெச்சிருக்க முடியும்? எதுக்காக அங்கே போனீங்க?’ என்று கேட்டாராம்.
சீனிவாசனோ, ‘பெஞ்சமின் எனக்கு குடும்ப நண்பர். 30 வருஷமா அவரைத் தெரியும். அந்த கல்யாணத்துக்கு நான் எப்படி போகாமல் இருக்க முடியும்? கல்யாணத்துக்குப் போனால் கட்சியை விட்டு தூக்கிடுவீங்களா?’ என்று சத்தம் போட்டுவிட்டு போனை வைத்துவிட்டாராம். அதன் பிறகு தினகரன் தரப்பில் இருந்து சீனிவாசனுக்கு அழைப்பு வந்தும் அவர் போகவில்லையாம். விரைவில் அங்கே இருந்து இடம் பெயர்ந்து தாய் கழகத்தில் இணையும் முடிவுக்கு வந்துவிட்டாராம் சீனிவாசன்.
டிடிவி அணியில் இருந்து செந்தில்பாலாஜி பிரிந்து திமுகவுக்கு போன போது எப்படி பிரமாண்டமாக இருந்ததோ அதேபோல தனது ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைய திட்டமிட்டு இருக்கிறாராம் சீனிவாசன். துணை முதல்வர் ஓ.பன்னீருடன் இது சம்பந்தமாக பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டதாம். ‘நீங்க வர்றது சந்தோஷம்தான். மிச்சம் இருக்கிறவங்களையும் பேசிப் பாருங்க..’ என பன்னீர் சொல்ல... ஆட்களை திரட்டும் ஆபரேஷனில் இறங்கியிருக்கிறாராம் சீனிவாசன். விரைவில் அதிமுகவில் இணைப்பு விழா இருக்கலாம்.” எ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக