வெள்ளி, 11 ஜனவரி, 2019

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இறப்பு ..தொடர் கொலைகளும் தொடர் விபத்துக்களும் தொடர்....

Sivasankaran Saravanan. : 2016 டிசம்பர் மாதம் ஜெயலலிதா அம்மையார் இறக்கிறார்.
2017 ஏப்ரல் மாதம் அவருக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் காவலாளி கொலை செய்யப்பட்டார்.
காவலாளியை கொலை செய்துவிட்டு உள்ளே புகுந்து திருடியுள்ளனர்.
யார் திருடினார்கள் என்று தெரியவில்லை. ஏனென்றால் சிசிடிவி காமிரா வேலை செய்யவில்லை.
கொடநாடு எஸ்டேட்டுக்குள் புகுந்து அங்கிருந்த விலையுயர்ந்த கடிகாரங்களை திருடினார்கள் என எப்ஐஆர் போடப்பட்டது.
ஓரிரு மாதங்கள் கழித்து ஜெயலலிதா வின் கார் ஓட்டுநர் கனகராஜ் அவரது குடும்பத்தோடு கார் விபத்தில் மரணமடைகிறார்.
பிறகு சில நாட்கள் கழித்து கொடநாடு எஸ்டேட் சிசிடிவி ஆபரேட்டர் இறந்துவிடுகிறார்.
திருடியவர்களில் ஒருவர் என சந்தேகிக்கப்படும் நபர் சயன் என்பவர் அவரது குடும்பத்தோடு ஓரிரு மாதங்கள் கழித்து காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் அவரைத்தவிர அவரது குடும்பம் செத்துபோனது.
அந்த உயிர்பிழைத்த நபர் சயன் மற்றும் திருட்டில் இன்னொரு கூட்டாளியான கேரளாவை சேர்ந்த வலையார் மனோஜ் இருவரது பேட்டியைத்தான் இன்று டெல்லியில் பத்திரிகையாளர் வெளியிட்டுள்ளார்.

ஓ மை காட் .. கடந்த இரண்டு வருஷத்துல தமிழ்நாட்டில இதெல்லாம் நடந்துச்சா ? எந்த டிவிலேயும் நியூஸ் பார்த்தா மாதிரி ஞாபகம் இல்லையே என்று தானே நினைக்கிறீர்கள் ?
யாராச்சும் திமுக தொண்டர் ஓட்டல் ல பரோட்டோவுக்கு ஓசி சால்னா கேட்டு சண்டையிடமாட்டாரா என எதிர்பார்த்து ஊடகங்கள் காத்திருந்ததில் இந்த செய்திகளை ஒளிபரப்ப மறந்திருக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக