வியாழன், 24 ஜனவரி, 2019

பாகிஸ்தான் .. நவாஸ் ஷெரிப் உடல் நிலை கவலைக்கு இடம் . ..


தினமலர் :லாகூர்,:அண்டை நாடான, பாகிஸ்தானில், மூன்று முறை பிரதமராக இருந்து, ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, நவாஸ் ஷெரீப்பின் உடல்நிலை மோசமடைந்துள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.பாகிஸ்தான் பிரதமராக இருந்த, நவாஸ் ஷெரீப், 69, ஊழல் புகார் காரணமாக, பதவி நீக்கம் செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதால், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, லாகூரில் உள்ள, கோட் லக்பத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட ஷெரீப்புக்கு, இதய நோயும் உள்ளது. சமீபத்தில், உடல்நிலை மோசமடைந்ததால், சிறையில் இருந்து, லாகூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்ட பின், 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டதையடுத்து, மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், இதய நோயால் பாதிக்கப்பட்ட ஷெரீப்பின் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், சிறையில், சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வசதி இல்லாததால், உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என்றும், அவரது குடும்ப டாக்டர், அத்னான் கான் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக