திங்கள், 21 ஜனவரி, 2019

கேரளம் கடவுளின் தேசமா? மன நோயாளர் தேசமா? அதிரவைக்கும் புள்ளி விபரங்கள் ...

இந்திய அளவில் மன நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட மாநிலம், அதிக தற்கொலைகள் நடக்கும் இரண்டாம் மாநிலம், domestic violence எனப்படும் சமூக குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் என கேரளா தான் இருக்கிறது. அதில் இந்திய அளவிலான சராசரி விகிதத்தை விட அதிகம்.
Nanda Kumaar : கேரளம் தமிழகத்தின் அண்டை மாநிலம், தமிழர்களோடு சற்றே இணக்கமாக இருக்கும் மாநிலமும் கூட.
எனக்கு விவரம் தெரிந்ததில் இருந்து கேரளாவை கடவுளின் தேசம் என்றும். கேரளாவில் எல்லோரும் படித்தவர்கள், நாகரீகமானவர்கள் என்ற ஒரு தோற்றம் கட்டமைக்கப்பட்டதை பார்க்கிறேன்.
அதிலும் சில சமயம் தேசிய கட்சிகள் மாநிலத்தை ஆண்டால் இது போன்ற நன்மைகள் பற்றிய கிடைக்கும் என்று சொன்னவர்களையும் பார்த்து இருக்கிறேன்.
100% கல்வியறிவு பெற்ற மாநில என்பதே சரியான சொற்பதம் கிடையாது. எழுத்த படிக்க தெரிந்தவர்கள் என்பது வேறு, கல்வியறிவு பெற்றவர்கள் என்பது வேறு இரண்டிற்கும் பெரிய வித்தியாசம் உண்டு.
அப்படியே அவர்கள் கூற்றின் படி கல்வியறிவு பெற்றிருந்தால் அதற்கு ஏற்றார்போல வேலைவாய்ப்பு கிடைத்து இருக்க வேண்டும் அதுவும் இல்லை. உள்நாட்டில் இல்லை என்றாலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பாவது இருக்க வேண்டும். ஆனால் கேரளாவினரோ இன்றைக்கும் அதிகமாக வெளிநாடுகளுக்கு கூலி வேலைகளுக்கு தான் செல்கின்றனர்.

இன்று காலை வேறு தகவலை இணையத்தில் தேடும் போது தற்செயலாக பார்வையில் பட்ட ஒன்று 2011. ஆண்டில் நடந்த இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பும் அதன் பின் நடந்த ஆய்வுகளும்.
அதில் கிடைத்த தகவல் என்னவென்றால் இந்திய அளவில் மன நோய்களால் அதிகம் பாதிக்கப்பட்ட மக்கள் கொண்ட மாநிலம், அதிக தற்கொலைகள் நடக்கும் இரண்டாம் மாநிலம், domestic violence எனப்படும் சமூக குற்றங்கள் அதிகம் நடக்கும் மாநிலம் என கேரளா தான் இருக்கிறது. அதில் இந்திய அளவிலான சராசரி விகிதத்தை விட அதிகம்.
கேரள ஆண்களை விட பெண்கள் தாம் மன அழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர் காரணம். கேரளாவில் இருக்கும் ஆண்களில் 90% பேர் கல்ஃப் நாடுகளுக்கு வேலைக்கு செல்கொன்றனர். அதனால் அந்த குடும்பத்தில் இருக்கும் பெண்கள் தனிமையில் இருப்பதால் மன அழுத்தத்திற்கு ஆளாவதாக சொல்லப்படுகிறது.
இந்த மன அழுத்தம் தான் பெரிதாகி தற்கொலையில் போய் முடிவதாக சொல்லப்படுகிறது.
2005-2010 இடைப்பட்ட காலத்தில் மத்திய அரசு அளித்த நிதியில் பாதியை செலவிடாமல் அப்படியே வைத்து இருந்ததும். போதிய சைக்கியாட்ரிஸ்ட்கள் இல்லாமல் இருப்பதும் காரணமாக சி.ஏ.ஜி அறிக்கை சொல்கிறது.
மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற வழி வகை செய்யாமல் மக்களின் வாழ்க்கையோடு விளையாடியதை தவிர வேறு எதையும் அங்கே ஆண்ட கட்சிகள் செய்யவில்லை. வளர்ச்சி என்ற பிம்பத்தை கட்டமைத்து மக்களை ஏமாற்றி கொண்டு இருப்பதை நாமும் நம்பிக்கொண்டு இருந்தால் பாதிப்பு நமக்கு தானே தவிர அவர்களுக்கு அல்ல.
இன்னும் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட கட்சிகள் என்ன செய்தது என கேட்டுக்கொண்டு இருக்காமல். நாம் பெற்ற வளர்ச்சியை கொண்டு அடுத்தக்கட்டத்திற்கு செல்ல வழியை பார்ப்பது தான் சாமர்த்தியம்.
#நந்தா
இணைப்புகள் :
https://www.thenewsminute.com/…/kerala-witnesses-alarming-r…
https://www.indiatoday.in/…/20110801-kerala-mental-illness-…
https://m.timesofindia.com/…/6-of-K…/articleshow/9033406.cms

Vijaybharathi Rajasekar : திராவிடத்தால் வீழ்ந்தோம்னு சொல்றவன்கிட்ட இத சொல்லி புரிய வைக்க முடியாதே.. இந்தியாவின் தேசிய சராசரியை விட கிட்டதட்ட ukவின் சராசரிக்கு நிகரான உயர்கல்வி பயில்வோரின் சராசரியை தமிழகம் வைத்துள்ளது.. ஆனா இங்க இருக்கவன் புரிஞ்சுக்க மாட்டான் அன்பரசி ஜெம்புலிங்கம் எதார்த்தம். இன்னும் நிறைய கேரளா பற்றி பேச வேண்டியுள்ளது. அவர்களின் தனிமனித மனப்பான்மையிலும் சில விவாதத்திற்குரியதே.. ஆண் பெண் பாகுபாடும் ஜாதிய பாகுபாடும் இன்னும் அதிகம் உள்ள இடம் அது. இதே போல் மேற்கு வங்கத்திலும் அலச இன்னும் பல காரணிகள் இருக்கிறது.. யோசிப்போம். விவாதிப்போம். நந்துவின் இந்த வித அணுமுறைக்கும் அதை பொதுவெளியில் ஆதாரத்துடன் பகிர்வதற்கும் பெருமையுடன் நன்றி.

 Ganesh Pandian  தமிழ் நாடு உடன் இணக்கமாக இருக்கும் மாநிலம் என்ற கூற்றை நான் ஏற்க மாட்டேன். அவர்கள் தமிழர்களை விரோதமாகவும் கீழாக பார்க்கிறார்கள், தமிழகத்தில் இருந்து வரும் லாரிகளை பாண்டி லாரி என்றும் தமிழர்களை கூட பாண்டி என்று தான் அழைப்பார்கள். பாவடை எனும் prithiviraj ஹீரோ வாக நடித்த படத்திலும் தமிழர்களை பற்றி வெளிப்படையாக தர குறைவான வசனங்கள் உள்ளன... அவர்கள் என்றுமே வஞ்சம் வைத்து கொண்டு தான் உள்ளார்கள்.

Sutherson Magesh பெரும்பாலான படங்கள், சீரியல்ஸ கூட தமிழர்களை கீழ்தரமாகவே காட்டீருப்பாங்க. இடுக்கி போன்ற இடங்களில் தேயிலை தோட்டத்தில் தமிழர்கள்  நிறைய கூலி வேலை செய்கிறார்கள் அதை வைத்து பொத்தாம் பொதுவா தமிழர்கள் சோத்துக்கு இல்லாதவன்னே தொடர்ந்து சித்தரிக்கப்பட்டு வருது

Binny Moses :  தொழில் வளர்ச்சி அடையாமைக்கு யூனியன் பிரச்சினை மிக முக்கியமான காரணம் ( தொழிலாளர்களுக்கு அது சாதகம்தான் என்றாலும் )எங்கள் பகுதியில் (மார்த்தாண்டம்) தெருவுக்கு தெரு இருக்கும் முந்திரி ஆலைகள் அனைத்தும் மலையாளிகளுடையது.தென் ஆப்ரிக்காவிலிருந்து கொச்சின் துறைமுகத்தில் வந்து இறங்குகிற முந்திரி மறுபடியும் இங்கு எடுத்து வரப்படுகிறது.திருவனந்தபுரத்தில் இறங்கி ஒரு வாழைக்குலையை நீங்களாக சுமந்து செல்ல முடியாது என்பதே நிலமை.இப்போது எப்படி என்று தெரியாது...முன்பு திருநெல்வேலியிலிருந்து செல்கிற சிமெண்ட் மூட்டைகளை இங்கிருந்து செல்கிற கூலியாள்கள் இறக்கி முடியும் வரை வேடிக்கை பார்த்து விட்டு ,அதற்கான கூலியை சண்டையிட்டு வாங்கிப் போவார்கள்.விவசாயத்திற்கு போதுமான நிலம் இல்லாமை ,கடின கூலி உடல் உழைப்பிற்கு அஞ்சுவது...ரப்பர் விலை வீழ்ச்சி...என்று நிறைய காரணிகள் நந்தா. முகில் சேகரன் மனதளவில் சாதிய மற்றும் பாலின பாகுபாட்டில் கேரளா இன்னமும் மிக கீழ்தளத்தில் தான் நிற்கிறது... எழுத படிக்க தெரிதலுக்கும் கல்வியறிவு பெற்றலுக்குமான வித்தியாசம் இல்லாதோர் ஏற்படுத்திய மாய பிம்பம் தான் இந்த ஒப்பீடு ஏற்பட காரணம்...

அன்பரசி ஜெம்புலிங்கம் எதார்த்தம். இன்னும் நிறைய கேரளா பற்றி பேச வேண்டியுள்ளது. அவர்களின் தனிமனித மனப்பான்மையிலும் சில விவாதத்திற்குரியதே.. ஆண் பெண் பாகுபாடும் ஜாதிய பாகுபாடும் இன்னும் அதிகம் உள்ள இடம் அது. இதே போல் மேற்கு வங்கத்திலும் அலச இன்னும் பல காரணிகள் இருக்கிறது.. யோசிப்போம். விவாதிப்போம். நந்துவின் இந்த வித அணுமுறைக்கும் அதை பொதுவெளியில் ஆதாரத்துடன் பகிர்வதற்கும் பெருமையுடன் நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக