திங்கள், 7 ஜனவரி, 2019

என்ஜினியரிங் மாணவன் கொலை: காதல் பிரச்சனை நண்பனை சக மாணவர்களே கொன்றனர்

கல்லூரி மாணவர் கொலைtamil.indianexpress.com என்ஜினியரிங் மாணவன் கொலை: காதல் பிரச்சனைக்கு நண்பனை சக மாணவர்களே பழி தீர்த்த கொடுமை திசை திருப்ப, அவரது செல்போனில் இருந்து வீட்டிற்கு தொடர்பு கொண்டனர்< கும்பகோணம் அருகே 5 லட்ச ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட கல்லூரி மாணவர் மும்தசிர் காதல் விவகாரம் தொடர்பாக சக நண்பர்களால் கொல்லப்பட்ட விவகாரம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
கும்பகோணம் அருகே உள்ள ஆவணியாபுரத்தை சேர்ந்தவர் சாகுல்ஹமீது. இவர் தற்போது துபாயில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மும்தசிர் (வயது 19 ) மயிலாடுதுறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 4ம் தேதி இரவு தனது மோட்டார் சைக்கிளில் திருமங்கலக்குடியில் உள்ள அக்கா வீட்டுக்கு செல்வதாக புறப்பட்டுள்ளார். அதற்கு பிறகு வீடு திரும்பாத அவர், கடத்தப்பட்டுவிட்டதாகவும் ரூ. 5 லட்சத்தை கொடுத்தால் அவரை விடுவித்துவிடுவதாகவும் மும்தசிரின் அம்மாவுக்கு செல்போனில் மர்ம நபர் ஒருவர் தகவல் கூறியுள்ளார்.
உடனே மும்தசிர் குடும்பத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை திருபுவனம் அருகே காவிரி ஆற்றங்கரையில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையில், காதல் பிரச்சனை காரணமாக திருபுவனம் பகுதியை சேர்ந்த நியாஸ் அகமது, முகமது கலீல், சலீம் ஆகிய சக கல்லூரி மாணவர்களே கொலை செய்ததும், பின்பு காவல்துறையை திசை திருப்ப, அவரது செல்போனில் இருந்து வீட்டிற்கு தொடர்பு கொண்டு, மும்தசிர் கடத்தப்பட்டதாக கூறி ரூ.5 லட்சம் கேட்டதும் தெரியவந்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக