புதன், 23 ஜனவரி, 2019

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு

வீரகேசரி :லண்டனில் கடந்த ஆண்டு சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது கழுத்தை அறுப்பதைபோன்று சைகை காட்டிய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ குற்றவாளி என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது கழுத்தை அறுப்பதைபோன்று பிரிகேடியர் பிரியங்க பொர்னாண்டோ சைகை காட்டியமை தொடர்பில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொலை மிரட்டல் விடுத்த இராணுவ அதிகாரியான பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிரான இரு குற்றச்சாட்டில் அவர் குற்றவாளியென லண்டன் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக