புதன், 16 ஜனவரி, 2019

திராவிட லெனின் டாக்டர்.டி ,எம்,நாயர் பிறந்தநாள் ...

டாக்டர் டி.எம். நாயர் என்று சுருக்கமாக அழைக்கப்படும் தாராவத் மாதவன் நாயரின் பிறந்த நாள் இன்று . தமிழகத்தில் பார்ப்பனரல்லாதார் மேம்பாட்டுக்காக துவக்கப்பட்டு, நீதிக்கட்சி என அனைத்து மக்களா லும் அழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசனார் ஆகியோருடன் இணைந்து துவக்கிய தலைவர்களில் ஒருவர். இந்த அமைப் பின் கொள்கை மற்றும் விதிப்பிரிவு களை உருவாக்கியவரும் இவரே.
Born: January 15, 1868, - Died: July 17, 1919
dravidianencyclopedia.blogspot.com" தென்னாட்டு லெனின் என்று தந்தை பெரியார் அவர்களால் புகழ் மகுடம்
சூட்டப்பட்டவர் டாக்டர் டி.எம். நாயர் (தாரவாட் மாதவன் நாயர்)
நாயர் தலைசிறந்த பகுத்தறிவுவாதி; சொந்த ஊர் கேரள மாநிலம் பாலகாட்டுக்குப் பக்கத்தில் உள்ள தாரவாட் என்பதாகும்.
அவருடைய தந்தையார் மாவட்ட முன்சீப்பாகப் பணியாற்றியவர். அவருடைய அண்ணன் அந்தக் காலத்திலேயே பாரிஸ்டர் பட்டம் பெற்று டெபுடி கலெக்டராகப் பணியாற்றியவர். டாக்டர் டி.எம். நாயர் அவர்களோ சென்னை மாநிலக் கல்லூரியில் எம்.ஏ. படித்து முடித்து, சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்து, இங்கிலாந்து சென்று எடின்பரோ பல்கலைக் கழகத்தில் (1894) மருத்துவத் துறையில் M.B; Ch.B. பட்டம் பெற்று, அதன்பின் காது, மூக்கு, தொண்டை தொடர்பான அறுவை சிகிச்சைக்கான கல்வியையும் பயின்று எம்.டி. பட்டம் பெற்றவர் (1896).
மரபு வழி பெருமையிலும், கல்வி வழி பெருநிலையிலும் உயர்ந்த டாக்டர் நாயர் பெருமான், பார்ப்பனர் அல்லாதார் முன்னேற்றத்திற்காக உழைத்த பாங்கும், பெற்றியும் இருக்கிறதே அவற்றை எடுத்துச் சொல்ல வார்த்தைகள் போதவே போதாது.


 காங்கிரஸ்காரராகப் பொது வாழ்வில் அடியெடுத்து வைத்து, சென்னை மாநகராட்சி மன்ற உறுப்பினராகப் பணியாற்றி (தொடர்ந்து 12 ஆண்டுகள்) பிற்காலத்தில் நீதிக்கட்சி தோற்றுவிக்கப்பட மூல வித்தாக இருந்த மூவரில் ஒருவராகவும் திகழ்ந்தார்.
(டாக்டர் சி. நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம். நாயர் ஆகியோர்தான் அந்த மும்மணிகள்). ஜஸ்டிஸ் பத்திரிகையின் ஆசிரியராக இருந்து அவர் எழுதிய எழுத்துகளும், தலையங்கங்களும் படித்தோர் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தின. குறிப்பாக அக்கிரகார அம்மணியாகவே (பிராமிணி) ஆகிவிட்ட அய்ரீஷ் பெண்மணி அன்னிபெசன்ட் அம்மையாருக்கு ஜஸ்டிஸ் ஏட்டின்மூலம் கொடுத்த சூடுகள் கொஞ்சநஞ்சமல்ல.

ஆண்டி செப்டிக் என்ற மாத இதழையும் நடத்தி வந்தார். பார்ப்பனர்களைப் பற்றி டாக்டர் நாயர் கூறிய அந்தப் பொன்மொழி_ அனுபவ மொழி மிகவும் புகழ் பெற்றதாகும். எத்தியோப்பியன் தன் நிறத்தை மாற்றிக் கொண்டாலும், சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும், பார்ப்பனர்கள் தங்களின் பிறவிக் குணத்தை (Clannishness) மாற்றிக் கொள்ளவே மாட்டார்கள் என்பதுதான் அந்தப் புகழ் ஓச்சம் பொருள்மொழியாகும்.
 பார்ப்பனர் அல்லாதாரின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்காக தமது சொந்த செலவில் லண்டன் சென்றார். பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரை ஆங்கிலேயரையே கிறங்க வைத்தது. லண்டன் டைம்ஸ், கார்டியன் போன்ற ஏடுகள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன.

இரண்டாவது முறையாக டாக்டர் நாயர் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் முன் சாட்சியம் அளிப்பதற்காக லண்டன் சென்றார். சென்ற இடத்தில் நோய் வாய்ப்பட்டு டாக்டர் நாயர் மரணத்தைத் தழுவினார். இதில் கொடுமை என்னவென்றால், அப்பொழுது லண்டனில் இருந்த காங்கிரஸ் பார்ப்பனத் தலைவர்கள் ஒரு மரியாதைக்காகக்கூட நாயர் உடலுக்கு மரியாதை செலுத்தச் செல்லவில்லை. (வாழ்க பார்ப்பனர்களின் இனவெறி!).

 நாயரின் மறைவுச் செய்தி கேட்டு செனனைத் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் பார்ப்பனர்கள் தேங்காய் உடைத்து மகிழ்ந்து கொண்டாடினார்கள்.
இந்தச் சான்றிதழ், அளவுகோல் ஒன்று போதாதா பார்ப்பனர் அல்லாதாருக்கு டாக்டர் நாயர்பெருமான் பாடுபட்டதன் அருமைக்கும், பெருமைக்கும்? : டாக்டர் டி.எம். நாயர் எத்தகைய பெருமகன்?
லண்டனில் காலை சிற்றுண்டிக்குப் பிறகு நாங்கள் ஏ.ஆர். (ஏ. இராமசாமி) முதலியார் உடைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு, போர்ட்லண்ட் சாலை செல்லும் பாதாள ரயிலைப் பிடித்து, காலை சுமார் 10 மணிக்கு டாக்டர் நாயர் தங்கியிருந்த இடத்தை அடைந்தோம். ... கதவைத் திறந்த நர்ஸ் வேறொரு அறையில் எங்களை உட்காருமாறு கூறினார். நாங்கள் உட்கார்ந்தோம். மேட்ரன் உள்ளே வந்து, டாக்டர் நாயர் இன்று விடியற்காலை 5 மணிக்கு திடீரென்று இறந்துவிட்டார் என்று சொன்னார். அது எங்களுக்கு ஒரு இடி எங்களைச் செயலிழக்க வைத்த பேரிடி

எங்கள் நம்பிக்கை, எங்கள் வழிகாட்டி, எங்கள் தத்துவஞானி, எங்கள் தலைவர் இறந்துவிட்டார்! எங்கள் கதி என்ன ஆவது? ழி.ஙி.. (பிராமணரல்லாதார்) இலட்சியம் என்ன ஆவது? இந்த இயக்கத்தின் வருங்காலம் என்ன ஆவது? ஆண்டவனே! இப்படியா ஆகவேண்டும் ... எங்கள் துர்பாக்கியம், 3 கோடி மக்களின் தலைவிதியை எந்த ஒரு மனிதர் தாங்கி நின்றாரோ அவர் மறைந்தார் இலட்சியத்திற்காக ஒரு தியாகியானார் அதற்குப் பலியானார் உன்னதமான சாவு! 3 ஆண்டுகள் கடுமையான, ஓய்வேயில்லாத, இடைவிடா உழைப்பு அவரைக் கொன்று விட்டது.
 (பிராமணரல்லாதாரின்) எல்லாக் குறிக்கோள்களும் இன்னும் நிறைவேறாத நிலையில்! அய்யோ! அவர் போய்விட்டாரே! விடுதலையைக் கண்ணால் காண இன்னும் வெகு தூரம் செல்லவேண்டுமே! அது இன்னும் மறுக்கப்படுகிறது கைக்குக் கிடைக்காமலிருக்கிறது. இருந்தாலும் நாங்கள் முயற்சிப்போம் முயற்சி செய்து வெற்றி அடைவோம்! எங்களுக்குக் கிடைத்தாக வேண்டிய புகழுக்குரிய வெற்றியாக அது அமையாவிட்டாலும், வெற்றியை அடைந்தே தீருவோம்! தைரியத்தோடு இருக்க இதுவே நேரம். -

கே.வி. ரெட்டிநாயுடு தனது நாட்குறிப்பில் இவர்தான் ஆற்காடு ஏ. இராமசாமி ஆற்காடு இரட்டையர்கள் என்ற பெருமைக்குரியவர்களுள் ஒருவரும், நீதிக்கட்சியின் முன்னணித் தலைவராக விளங்கியவரும், லண்டனில் டாக்டர் நாயர் மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் நாடாளுமன்றக் குழுமுன் (கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுடன் இணைந்து) நீதிக்கட்சியின் சார்பில் சாட்சியம் அளித்தவருமான ஆற்காடு ஏ. இராமசாமி முதலியார்


: டாக்டர் டி.எம். நாயர் எத்தகைய பெருமகன்?
லண்டனில் காலை சிற்றுண்டிக்குப் பிறகு நாங்கள் ஏ.ஆர். (ஏ. இராமசாமி) முதலியார் உடைய புத்தகங்களை எடுத்துக் கொண்டு, போர்ட்லண்ட் சாலை செல்லும் பாதாள ரயிலைப் பிடித்து, காலை சுமார் 10 மணிக்கு டாக்டர் நாயர் தங்கியிருந்த இடத்தை அடைந்தோம். ... கதவைத் திறந்த நர்ஸ் வேறொரு அறையில் எங்களை உட்காருமாறு கூறினார். நாங்கள் உட்கார்ந்தோம்.
       
மேட்ரன் உள்ளே வந்து, டாக்டர் நாயர் இன்று விடியற்காலை 5 மணிக்கு திடீரென்று இறந்துவிட்டார் என்று சொன்னார். அது எங்களுக்கு ஒரு இடி எங்களைச் செயலிழக்க வைத்த பேரிடி எங்கள் நம்பிக்கை, எங்கள் வழிகாட்டி, எங்கள் தத்துவஞானி, எங்கள் தலைவர் இறந்துவிட்டார்! எங்கள் கதி என்ன ஆவது? ழி.ஙி.. (பிராமணரல்லாதார்) இலட்சியம் என்ன ஆவது? இந்த இயக்கத்தின் வருங்காலம் என்ன ஆவது? ஆண்டவனே! இப்படியா ஆகவேண்டும் ... எங்கள் துர்பாக்கியம், 3 கோடி மக்களின் தலைவிதியை எந்த ஒரு மனிதர் தாங்கி நின்றாரோ அவர் மறைந்தார் இலட்சியத்திற்காக ஒரு தியாகியானார் அதற்குப் பலியானார் உன்னதமான சாவு! 3 ஆண்டுகள் கடுமையான, ஓய்வேயில்லாத, இடைவிடா உழைப்பு அவரைக் கொன்று விட்டது.  (பிராமணரல்லாதாரின்) எல்லாக் குறிக்கோள்களும் இன்னும் நிறைவேறாத நிலையில்! அய்யோ! அவர் போய்விட்டாரே! விடுதலையைக் கண்ணால் காண இன்னும் வெகு தூரம் செல்லவேண்டுமே! அது இன்னும் மறுக்கப்படுகிறது கைக்குக் கிடைக்காமலிருக்கிறது. இருந்தாலும் நாங்கள் முயற்சிப்போம் முயற்சி செய்து வெற்றி அடைவோம்! எங்களுக்குக் கிடைத்தாக வேண்டிய புகழுக்குரிய வெற்றியாக அது அமையாவிட்டாலும், வெற்றியை அடைந்தே தீருவோம்! தைரியத்தோடு இருக்க இதுவே நேரம்.


- கே.வி. ரெட்டிநாயுடு தனது நாட்குறிப்பில்
இவர்தான் ஆற்காடு ஏ. இராமசாமி


ஆற்காடு இரட்டையர்கள் என்ற பெருமைக்குரியவர்களுள் ஒருவரும், நீதிக்கட்சியின் முன்னணித் தலைவராக விளங்கியவரும், லண்டனில் டாக்டர் நாயர் மறைவைத் தொடர்ந்து பிரிட்டன் நாடாளுமன்றக் குழுமுன் (கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுடன் இணைந்து) நீதிக்கட்சியின் சார்பில் சாட்சியம் அளித்தவருமான ஆற்காடு ஏ. இராமசாமி முதலியார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக