வியாழன், 17 ஜனவரி, 2019

கக்கனின் எளிமைக்கு பலியான அப்பாவிகள்... எளிமை நடிப்பால் கக்கன் குடும்பத்துக்கு கிடைத்த லாபம்...

Chozha Rajan : கக்கன் அவர்கள் குடும்பத்தில் ஒருமகன் கூட்டுறவுத்துறை
இணைபதிவாளர்.
இன்னொருவர் காவல்துறையில் ஐபிஎஸ் அலுவலர்.
இரண்டுமகன்களும் மூத்த மருமகளும் மருத்துவர்கள்.
கக்கன் அவர்களை 1978 இறுதியில் ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர். முதன்மை மருத்துவர் பரிசோதித்து உள்நோயாளியாக சேர்க்கிறார்.
ஆர்.எம்.ஓ விரைந்துவந்தார்.
கக்கனுடன் சேர்ந்து அனைத்து நடைமுறைகளையும் பூர்த்தி செய்கிறார்.
வருமானத்தை பூர்த்தி செய்யும்போது மாதம் ரூபாய் 350 எனக்குறித்து ‘சி கிளாசில்’ சேர்க்கிறார். ஆனால் கக்கன் ஒத்துக் கொள்ளவில்லை.எனது பென்சன் 280 ரூபாய்தான் அதை மட்டுமே எழுதவேண்டும், என்கிறார்.
பிரச்னை டீனிடம் செல்கிறது. அவரும் வந்து அரசு விதிமுறைகளை விளக்கி, எடுத்துரைக்கிறார். எதுவும் எடுபடவில்லை. இறுதியில் டீனின் ஆலோசனையின்படி பொதுவார்டில் ஒருபகுதியை திரைகளால் மறைத்து அறை உருவாக்கி அவரை வைத்தனர்.
மதுரைக்கு ஒருநிகழ்ச்சிக்காக வந்த முதல்வர் எம்ஜியார், கக்கன் மருத்துவமனையில் இருப்பதை
அறிந்து மருத்துவமனைக்கு வந்தார். கக்கன் பொது வார்டில் இருப்பதை பார்தது கொதித்தார்.

தன்செலவில் சிறப்பு வார்டில் அனுமதிக்கும்படி ஆணையிட்டார்.
டீனை இடமாறுதல் செய்தார். ஆர்எம்ஓவை சஸ்பெண்டு செய்தார். இதுதான் கக்கன் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற கதை.
இரண்டாண்டுகள் கழித்து கோமாவிலேயே சென்னை பொதுமருத்துவமனியில் மறைந்தார்.
பின்குறிப்பு- ஒரு பாவமும் செய்யாத டீனுக்கு இடமாறுதல், ஆர்எம்ஓவுக்கு சஸ்பெண்ட் ஆர்டர். அதாவது, பொதுவார்டில் 4 நோயாளிகளுக்கு உரிய இடத்தை கக்கனுக்காக ஒதுக்கியிருக்கிறார்கள்.
எளிமைக்காக அடம்பிடித்த கக்கன், அரசின் சிறப்புச் சலுகையை ஏற்கமாட்டேன் என்று அடம்பிடித்திருக்க வேண்டாமா? என்ற கேள்வியை யாரும் கேட்க மாட்டார்கள்.
மொத்தத்தில் பார்த்தால் கக்கன் அடம்பிடித்ததால் கக்கனுக்கு மட்டுமல்ல, எம்ஜியாருக்கும் கருணை வள்ளல் என்ற பப்ளிசிட்டிதான் கிடைத்திருக்கிறது.
எம்ஜிஆரின் பார்வையைப் பெற்றதன் மூலம் ஒரு மகனுக்கு, டிஎன்பிஎஸ்சி குருப் 1மூலம் டிஎஸ்பி ஆகி, பின் ஐபிஎஸ்ஸும் கன்பர்ம் ஆனது. ஒரு மகன்வழி. மூத்த பேத்தி இருவருக்கு ராமச்சந்திராவில் மருத்துவப் பணி...



 கிளிமூக்கு அரக்கன்  :

இந்தி எதிர்ப்பு .... அன்றைய போலீஸ் மந்திரி கக்கன் ஒரு தென்னகத்து ஜெனரல் டயர்? ... மறுபக்கம்
கிளிமூக்கு அரக்கன் : தென்னகத்தின் 'ஜெனரல் டயர்' கக்கன்ஜி அவர்கள் பாரதத்தாயின் தவப்புதல்வர்களில் ஒருவர் என்பது நம்மின் எத்தனை பேருக்கு தெரியும்!
சர்தார் பட்டேல் போல் காங்கிரசு கட்சியில் இருந்தாலும் மனு தர்மத்தை பூரணமாக கடைபிடித்தவர் . கக்கன்ஜியின் தமையனார் விஸ்வநாதன்ஜி ஒரு வழக்கறிஞர் ஆவார். அவர் இந்து முன்னணி கட்சியைச் சேர்ந்தவர். தமையனார் இந்து முண்ணனியிலும், கக்கன்ஜி காங்கிரசிலும் இருந்தாலும் இருவரின் கொள்கையும் ஒன்று தான்.
இந்திய திருநாட்டின் ஒற்றுமைக்கு எதிராக அக்காலத்திய 'பொர்க்கீஸ்' தமிழர்கள் போராட்டம் செய்தபோது அடிமை ஓபிஎஸ் போல் தடியடி மட்டும் நடத்தவில்லை நமது கக்கன்ஜி. மாறாக போராடிய தமிழ் பொர்க்கீஸ்களை ஜெனரல் டயர் போல நாயைச் சுடுவதைப் போல் சுட ஆணித்தரமாக ஆணையிட்ட புண்ணிய புதல்வர் அவர்.
இந்திய வரலாற்றிலேயே அறவழியில் போராடியவர்களின் மேல் துப்பாக்கி சூடு நடத்தியவர்கள் இருவர் தான். ஒன்று மிலேச்சர் ஜெனரல் டயர். மற்றொருவர் பாரததேவியின் தவப்புதல்வர் கக்கன்ஜி!
அன்று அவர் எடுத்த வீர முடிவினால்தான் இன்று இந்தி இந்த அளவுக்காவது வளர்ந்துள்ளது. அவர் எடுத்துக்காட்டிய அடக்குமுறையை பார்த்தபின் இந்தி திணிப்பை எதிர்க்க எந்த மாநிலத்திற்கும் துணிவில்லை. துப்பாக்கிகளின் முன் நெஞ்சை நிமிர்த்த எல்லா மாநிலங்களும் தமிழ்நாடா என்ன?

ராஜஸ்தானி, குஜராத்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மராத்தி போன்ற பல மொழிகளில் இன்று நாளிதழ்களும், வாரப்பத்திரிகைகளும், திரைப்படங்களும் மிகக்குறைவே. இந்த மொழிகளை இணையத்தில் யாருமே பயன்படுத்துவத்தில்லை. அதற்கு பதில் இந்த மொழிகளை எல்லாம் அழித்து விட்டு நமது பாரத பூர்வ புண்ணிய இந்தி மொழி வளர்ந்துள்ளது.
இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் கக்கன்ஜி தான் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும். பலநூறு பொர்க்கீஸ் தமிழர்களைக் கொன்று இந்திய தாயின் உண்மை புதல்வராக தொடைதட்டிக்கொண்ட கக்கன்ஜிக்கு பாரத் ரத்னா வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
அதற்கு முயற்சியும் நடந்தது. ஆனால் முழுமையான சூத்திர சாம்ராஜ்ஜியத்தை தமிழகத்தில் நிறுவிய முதல்வர் அண்ணாத்துரை மத்திய அரசிற்கு பரிந்துரைக்க மறுத்து விட்டார். அதன் பிறகு கலைஞர் ஆட்சியில் நமது வீர சகோதர்கள் மீண்டும் மனு கொடுத்த போது கலைஞர் அவர்கள் "இவர் செய்த கொலைகளுக்கு இவர் புழலில் இருக்க வேண்டும். வயது காரணமாக வெளியில் விட்டிருக்கிறோம், ஓடி போய் விடுங்கள்," என்று வாயிலேயே மிதித்து அனுப்பிவிட்டார்
ஒரு நிஜமான தேச புதல்வனுக்கு இது தான் மரியாதை!
கோட்சே, தாராசிங் போல் கொள்கைக்காகவே வாழ்ந்த கக்கன்ஜியை நினைவு கூறுவோம்! जन्मदिन कि शुभ कामनाएं கக்கன்ஜி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக