ஞாயிறு, 13 ஜனவரி, 2019

துபாயில் பறவைக் கூண்டில் அடைத்து இந்தியர்கள் சித்ரவதை-வீடியோ


/tamil.oneindia.com/-Keerthi Arunachalam : துபாய்: ஐக்கிய அரபு அமீரகம் கால்பந்து அணிக்கு ஆதரவு அளிக்கக் கோரி இந்திய ரசிகர்களை பறவைகள் கூண்டில் அடைத்து கொடுமைப்படுத்திய அரபு நாட்டு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அபுதாபியில் ஆசியக் கோப்பை கால்பந்துப் போட்டி நடந்து வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் அணியுடனான போட்டி ஒன்றில் இந்திய அணி வென்றது. ஆனால் அந்த போட்டிக்கு முன்னதாக இணையத்தில் வீடியோ ஒன்று வைரலாகி அனைவரையும் அதிர வைத்துள்ளது.
விவரம் இதுதான்.. அந்த போட்டிக்கு முன்பாக, அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஆசிய நாட்டைச் சேர்ந்த இந்தியர்கள் உள்ளிட்ட சிலரை ஒரு பறவைக் கூண்டுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துகிறார். அதில், அந்த அரபு நாட்டவர்.. இன்று நடக்கும் கால்பந்துப் போட்டிக்கு எந்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பீர்கள் என்று கேட்கிறார்.< இந்தியர்களை அடித்த அரபு நாட்டவர்< அதற்கு கூண்டுக்குள் இருக்கும் மக்கள், இந்திய அணிக்கு என்று தெரிவிக்கின்றனர்.உடனே அந்த நபர் தமது கையில் இருக்கும் பிரம்பால் அடித்து, அரபு அணிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக