செவ்வாய், 29 ஜனவரி, 2019

95% ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர்... பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தகவல்

An Hour extended for Strike teachers Come back to Work at 10 oclock otherwise the job is vacancy tamil.oneindia.com - alagesan. : சென்னை: தமிழகத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95% பேர் பணிக்கு திரும்பி உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாநிலம் முழுவதும் 95% ஆசிரியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பினர் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை என்றும் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர் செல்வி தெரிவித்துள்ளார். இதே போல், திருச்சியில் 90%, கடலூரில் 60% ஆசிரியர்கள் பணிக்கு வந்துள்ளனர்.


இதற்கிடையே, "இனி போராட்டத்தில் ஈடுபடமாட்டோம்" என்று பணிக்கு திரும்பிய ஆசிரியர்களிடம் எழுத்துப்பூர்வமாக கடிதம் பெற்ற பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
ஒவ்வொரு பள்ளிகளிலும் கடிதம் பெறும் நடவடிக்கை தொடங்கி உள்ளது. மேலும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 700 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நேற்று 15 நாள் காவலில் அடைக்கப்பட்டதை அடுத்து கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனால், பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1200 ஐ தாண்டி உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக