திங்கள், 14 ஜனவரி, 2019

மார்வாடிகள்.. தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் ... 80 இலட்சம் வாக்காளர்கள்?

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் ஒரு கோடியே நாற்பது லட்சம் வட இந்தியர்கள் குடியேறியுள்ளதாக அதிர்ச்சி தகவல் சொல்கிறது. இதில் 80 லட்சத்துக்கும் மேல் தமிழக வாக்காளர்கள்
m.dailyhunt.in :சென்னை: வாழ வழித் தெரியாமல் தவித்து நிற்கும் தமிழக மக்களுக்கு இடையில் தங்களின் தொழில்களை விரைவாக உயர்த்திக் கொண்டு வருகின்றனர் மார்வாடிகள் என்று சமூக நல ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் விவசாயமே பிரதான தொழில். இதை தவிர்த்து பல தொழில்களும், தொழிற்சாலைகளும் உருவாகி உள்ளது. இருப்பினும் தமிழர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு என்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
விவசாயமும் நாளுக்கு நாள் தேய்பிறையாக மாறி வரும் நிலை. மார்வார் எனும் கிழக்கு ராஜஸ்தான் பகுதியிலிருந்து வந்தவர்கள் மார்வாரிகள். இவர்கள்தான் மார்வாடிகள் என அழைக்கப்படுகின்றனர். வறண்ட பாலைவனப் பகுதியானதால் வளங்களை சிக்கனமாகத் சேமித்து வாழத்தெரிந்த சமூகத்தினர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் மெல்ல மெல்ல பஞ்சாப், உத்தரப் பிரதேசம், வங்காளம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா என பரந்து விரிந்து, முதலாம் உலகப்போரின்போது கிட்டத்தட்ட வட இந்தியா முழுவதும் வணிக உலகில் விஸ்வரூபம் எடுத்தவர்கள் மார்வாடிகள்.

தற்போது இவர்கள் தமிழகத்தில் தங்கள் வணிகத்தை அனைத்து துறைகளிலும் நீட்டித்து வருகின்றனர். இவர்கள் செய்யாத தொழிலே இல்லை என்று கூறும் நிலை உருவாகி விட்டது. இவர்கள் மேற்கொள்ளும் தொழிலில் தங்கள் சமூகத்தினருக்கே அதிக வாய்ப்புகள் அளிக்கின்றனர். மார்வாடிகள் தங்களுக்குள்ளேயே வணிகம் செய்து அதிக லாபம் காண்கின்றனர். தமிழ் வணிகர்களுக்கு அவர்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பது இல்லை.

இதனால் மார்வாடிகளின் எண்ணிக்கையும், அவர்கள் செய்யும் தொழிலும் அதிகரிக்கிறது. அதே தொழிலை மேற்கொள்ளும் தமிழர்கள் நிலைதான் பரிதாபகரமாக உள்ளது. தமிழ்நாட்டில் வாழ வந்த அவர்கள் நிலை உயர்கிறது. ஆனால் தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தொழில் செய்யும் தமிழர்களின் நிலை தாழ்ந்து கொண்டே செல்கிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும். மார்வாடிகளின் ஆக்டோபஸ் போன்ற கரங்களால் தமிழகத்தை வளைக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும். அவர்களும் வாழட்டும். தமிழர்களையும் வாழ விட வேண்டும்.

இவ்வாறு சமூக நல ஆர்வலர்கள் தெரிவித்துள்ளன
வடநாட்டுக்காரனுடன் அதிகம் உறவாடும் ஒரு நண்பர் இன்று கொடுத்த அதிர்ச்சி தகவல்.
பாண்டிச்சேரி அரவிந்த் ஆசிரமம், தஞ்சை சாஸ்த்ரா பல்கலைகழகம், கோவை ஈஸா போன்ற பெரும் பணக்காரர்கள், கல்வியாளர்கள், மார்வாடி வியாபாரிகள் போன்றோருக்கு RSS உத்தரவிட்டுள்ளதாம். தமிழகத்தின் நிலப்பரப்புகளை வடநாட்டவர்கள் அதிகளவில் ஆக்கிரமித்து ஆதிக்கம் செலுத்த வேண்டுமாம்.
இதன் காரணமாகவே மார்வாடி ஜெயின் செளராஷ்ட்ரா பீகாரி குஜராத்தி அதிகமானோர் தமிழ்நாட்டில் படிக்க வருவதும், வியாபாரம் செய்வதும், நிலம் வாங்கி வீடு கட்டுவதும் தற்போது பரவலாக தமிழகத்தில் சொத்துக்களையும் வாங்குகின்றனர்.
இன்னும் 40 - 50 வருடங்களில் தமிழகம் வடமாநிலத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும் பிறகு தானாகவே தமிழன் அடிமை இனமாக மாறிடுவான்.

தமிழர்களே பாசிசத்தின் கோர பிடியிலிருந்து பாதுகாத்து கொள்ள... யாரும் உங்கள் சொத்துக்களை தமிழர் அல்லாதோரிடம் விற்காதீர்கள்.
தமிழர்கள் புதிதாக சொத்து வாங்குவதாக இருந்தால் வடமாநிலத்தவனிடம் உள்ள தமிழ் மண்ணை வாங்குங்கள்.
வட நாட்டுக்காரன் வியாபாரத்தை புறக்கணித்து நஷ்டம் ஏற்படுத்தி தமிழகத்தை விட்டு துரத்துங்கள். தமிழனின் பொருளாதாரத்தையும் நிலத்தையும் வடநாட்டுக்காரனிடம் இழக்காதீர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக