புதன், 30 ஜனவரி, 2019

வருமான வரி சோதனை சரவணா ஸ்டோர்ஸ் உட்பட74 இடங்களில் சென்னை, கோவையில் ... விடியோ

tamil.oneindia.com - veerakumaran : 74 இடங்களில் ஐடி ரெய்டு சென்னை: சென்னையில் 72 இடங்களிலும், கோவையில் 2 இடங்களிலும் என தமிழகத்தில் மொத்தம் 74 இடங்களில் வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வருகிறது.
சரவணா ஸ்டோர்ஸ், ஜி ஸ்கொயர், லோட்டஸ் க்ரூப் மற்றும் ரேவதி க்ரூப் ஆகியவற்றுக்கு சொந்தமான இடங்கள்தான் இவையாகும். பெரம்பூரில் உள்ள ரேவதி ஸ்டோருக்கு சொந்தமான நகைக்கடை, ஜவுளிக்கடை, பர்னிச்சர், சூப்பர் மார்கெட் ஆகிய கடைகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது. இதேபோல தி.நகர், பாடி ஆகிய பகுதிகளில் உள்ள சரவணா ஸ்டோர் கடைகளிலும் ரெய்டுகள் நடைபெற்று வருகின்றன.
சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் வீடுகளிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. ஜிஎஸ்டி வரி செலுத்தாதது பற்றி ஏற்கனவே இங்கு சோதனை நடந்திருந்தது. அந்த ஆவணங்கள் அடிப்படையில் தற்போது வருமான வரித்துறை ரெய்டு நடத்தி வருகிறது.
இதனால், சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தில் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள், இதனால் ஏமாற்றத்தோடு திரும்பினர்.
வரி ஏய்ப்பு செய்தாக வந்த புகாரின் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். காலை 7 மணி முதல் ஐடி ரெய்டு ஆரம்பித்துள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட அதிகாரிகள் இந்த வருமான வரி சோதனைகளில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வருமான வரி சோதனைகளால் சென்னை, கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக