செவ்வாய், 1 ஜனவரி, 2019

சபரிமலை 620 கிலோ மீட்டர் பெண்கள் மதில் .. . கோயில் அனுமதி போராட்டம் 'women's wall' to pledge for gender ...


தினமலர் : காசர்கோடு: சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து, சபரிமலை சென்று வழிபாடு நடத்த பெண்கள் முயன்றனர். இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், மாநிலத்தில் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ், பா.ஜ., ஆகியவை, முதல்வர் பினராயி விஜயனுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால், கேரள அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அரசின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தவும், வழிபாட்டு தலங்களில் பாலின சமத்துவத்தை உறுதிபடுத்த வேண்டும், கோர்ட் தீர்ப்பை ஏற்க வேண்டும் எனக்கூறி , ஆளுங்கட்சி சார்பில், காசர்கோட்டிலிருந்து பாறசாலை வரை 640 கி.மீ., தூரத்திற்கு பெண்கள் வரிசையாக நின்று மனித சுவர் அமைத்தனர். அமைச்சர் கே.கே. சைலஜா தலைமையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர். ஆனால், இந்த உறுதிமொழியில், சபரிமலை குறித்த வார்த்தை இடம்பெறவில்லை. மாலை 4 மணி முதல் 4.15 வரை இந்த போராட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக