சனி, 26 ஜனவரி, 2019

ஜாக்டோ ஜியோ போராட்டம்....5000 கல்விக்கூடங்கள் மூடக்கூடாது என்ற கோரிக்கை


தமிழ் மறவன் : அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின்
நியாயமான போராட்டத்தைப் பற்றி பலர் தவறான செய்திகளைச் சொல்லி மடைமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
தன்னை பெரியாரிஸ்டுகளாக சொல்லிக் கொள்ளுகிற சில அரைகுறை அதிபுத்திசாலிகளோ ஆசிரியர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
அட.., அறிவற்ற மூடர்களே! தந்தை பெரியார் காமராசரை வைத்து திறந்த ஐயாயிரம் கல்விக்கூடங்களை மூடக்கூடாதென கோரிக்கை வைத்து ஆசிரியர்கள் போராடுவதை அறியவில்லையா?
நியாயமாக.. கருஞ்சட்டைகள் செய்ய வேண்டிய போராட்டத்தை ஆசிரியர்கள் செய்வதற்கு வெட்கப்படுங்கள்!
இதோ, அதிபுத்திசாலிகளாய் தங்களை எண்ணிக் கொள்ளுகிற முட்டாள்களின் குரல்..
"ஏற்கனவே பல ஆயிரங்கள் ஊதியம் பெறும் இவர்கள் ஊதிய உயர்வு கேட்கலாமா?"
இப்படிக் கேட்போர் வடிகட்டிய முட்டாள்களன்றோ?
அட..,
முற்போக்கு மூடர்களே!
ஆசிரியர்களின் இப்போராட்ட கோரிக்கைகளில் ஊதிய உயர்வே கேட்கவில்லையே!

அட..,
அறிவற்ற மூடர்களே!
3500 சத்துணவு மய்யங்களை மூடாதே என்றல்லவா ஆசிரியர்கள் கோருகிறார்கள்?
இதுவா தவறு?
அரசு ஊழியர்களின் 21மாத ஊதியத்தொகை வழங்காமல் இருக்கிறீர்களே!
அதைக் கொடு என்று கேட்டால் சும்மாயிருக்கிற போராளிகளுக்கு ஆசனவாய் எரிவது ஏனோ?
கோரிக்கைகளை படி!
விமர்சனங்களை பதிவிடுவதற்கு முன் படி!!
அதுதான பகுத்தறிவு?
அட..,
அடிமுட்டாள் அறிவாளிகளே!
ஆசிரியர்களின் ஊதியம் அதிகம் எனும் பார்ப்பனப் பொதுபுத்தியை ஒப்புவிக்கும் குப்பை மூளையே!
பார்ப்பனர்கள் மட்டுமே கோலோச்சிய ஆசிரியர் பணியில் திராவிட இயக்கங்களின் சமூகநீதிப் பணிகளால் இன்று..,
தாழ்த்தப்பட்டோர்,
மிகப் பிற்படுத்தப்பட்டோர்,
பிற்படுத்தப்பட்டோர் ஆசிரியர்களாக வளர்ந்து நிற்பது பார்ப்பானுக்கு எரியும்தான்!
சரி, உனக்கேன் எரிகிறது?
சிந்திக்கத் தெரியாத சழக்கர் கூட்டமே!
ஆசிரியர் ஊதியம் மட்டுமா அதிகம் என்கிறாய்?
பார்ப்பனர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிற மாநில தலைமைச் செயலகம்,
மத்திய அரசின் உயர் பதவிகள்,
தூதரகங்கள்,
பிரதமர் அலுவலகம்,
மத்திய அமைச்சர்களின் அலுவலகங்கள்,
நீதிபதிகள்,
உளவுத்துறை உயர்பதவிகள் என பட்டியலிட்டுக் கொண்டே போகலாமே!
இப்பதவிகளில் உள்ளோருக்கான ஊதியமும், இதர படிகளும், சலுகைகளும் கேட்டால் உமக்கு மயக்கமே வந்துவிடாதா?
அத்தைனையும் அனுபவிப்போர் 99.9% பார்ப்பனர்கள் தானே?
அவர்கள் மீது வராத கோபம் ஆசிரியர்கள் மீது வருகிறதே?
நியாயம்தானா?
முட்டாள் கிருக்கனே!
நியாயம்தானா?
பார்ப்பானின் சூழ்ச்சிக்கு பலியாகிவிட்டு கருப்புச்சட்டையோடு கருத்துப் பேசலாமா?
தோழர்களே!
எல்லா கருப்புச்சட்டைகளையும் அல்ல!
நானும் கருஞ்சட்டைதானே!
ஆசிரியர்களின் போராட்டத்தை எதிர்கிற பகுத்தறியா பைத்தியங்களை மட்டுமே ஏசுகிறேன்!
வேதனையோடு ஏசுகிறேன்!!
அரிதாரம் பூசி நடிக்கும் கூத்தாடி கோடிகளில் ஊதியம் பெற்றாலும் என்றாவது பேசுபொருள் ஆனதுண்டா?
அட.., முன்டமே!
கல்விச்சாலைகளை காப்பாற்ற போராடும் ஆசிரியர்களை எதிர்ப்பதானால் கருப்புச்சட்டையை கழற்றி விட்டு காவியை போர்த்திக் கொள்!
மாறாக..,
பெரியாரை நேசிப்பதானால் போராட்டக்காரர்களோடு போராடத் துவங்கு!
- மு.தமிழ் மறவன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக