வியாழன், 31 ஜனவரி, 2019

45 ஆண்டுகளில் வேலை இன்மை நாட்டின் பேரழிவு.. .. புள்ளி விபர அதிகாரிகள் பதவி விலகல்..

THE HINDU TAMIL : நாட்டில் வேலையின்மை குறித்து
ஊடகங்களில் வெளியான அறிக்கை குறித்து மத்திய அரசைக் கடுமையாக விமர்சித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, " வேலையின்மை குறித்த கசியவிடப்பட்ட ரிப்போர்ட் கார்டு நாட்டின் பேரழிவை உணர்த்துகிறது" எனக் காட்டமாக விமர்சித்துள்ளார்.
தேசிய சாம்பிள் சர்வே ஆபிஸ்(என்எஸ்எஸ்எஸ்ஓ) கடந்த 2017-18-ம் ஆண்டு வேலையின்மை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், வேலையின்மை நிலவரம் 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 1972-73-ம் ஆண்டுக்குப்பின் மிகப்பெரிய உயர்வாகும் என ஊடகங்களில் செய்தி வெளியானது இது குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், வேலையின்மை குறித்து செய்தி வெளியிட்ட பிஸ்னஸ் ஸ்டான்டர்டு நாளேட்டின் லிங்க் வெளியிட்டுப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

வேலைவாய்ப்பு இல்லை. ஏதேச்சதிகாரத்தில் இருப்பவர் ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்குவேன் என உறுதியளித்தார். 5ஆண்டுகளுக்குப் பின், அவருடைய அரசு உருவாக்கிய வேலைவாய்ப்பு விவரங்கள் குறித்த அறிக்கை கசிந்துள்ளது, நாட்டுக்குப் பேரழிவாக இருக்கிறது. நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு கடந்த 45ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. 6.5 கோடி இளைஞர்கள் கடந்த 2017-18-ம் ஆண்டில் வேலைப் பறிபோயுள்ளது.நரேந்திரமோடி ஆட்சியில் இருந்து செல்ல நேரம் வந்துவிட்டது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்தி பதிவிட்டுள்ள படம்
 முன்னதாக காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா ட்விட்ரில் கூறுகையில், " நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் அளவு 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துவி்ட்டது. இதன் காரணமாகத்தான் என்எஎஸ்எஸ்ஓ அலுவலகம் வேலைவாய்ப்பு குறித்த தனது அறிக்கையை நிறுத்திவைத்துள்ளது. இதனால்தான் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் உறுப்பினர்களும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.
இளைஞர்களின் எதிர்காலத்தை ஆபத்தில் சிக்க வைக்கும் அரசை இந்திய மக்கள் விரும்பவில்லை " எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக