செவ்வாய், 22 ஜனவரி, 2019

மோடி டீ விற்றதே இல்லை: 43 வருட நண்பர் தொகாடியா.. அனுதாபம் தேட பொய் கூறினார்

மின்னம்பலம் : அரசியலில் அனுதாபத்தை  சம்பாதிக்கவே அவ்வாறு
கூறுகிறார்” என்று விஹெச்பி அமைப்பிரதமர் மோடி ஒருபோதும் டீ விற்றதில்லை, மக்களிடம் அனுதாபன் முன்னாள் செயல்தலைவர் பிரவீன் தொகாடியா தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தான் ஒரு ஏழைத் தாயின் மகன் என்றும், டீ விற்றவன் என்றும் அடிக்கடி கூறிவருகிறார். குஜராத் மாநிலம் வாத்நகரிலுள்ள டீக்கடையில்தான் பிரதமர் மோடி சிறிய வயதில் தனது சகோதரர்களுடன் வேலை பார்த்ததாகவும் கூறப்பட்டது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் கூட 'டீ விற்கும் சிறுவனாக இருந்து, குஜராத் முதல்வர் பதவி வரை உயர்ந்துள்ளேன்' என்பதை முன்வைத்துதான் அவர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.
இந்த நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முன்னாள் தலைவரும், அந்தராஷ்ட்ரிய ஹிந்து பரிஷித் அமைப்பின் தற்போதைய தலைவருமான பிரவீன் தொகாடியா, “பிரதமர் மோடியும் நானும் 43 ஆண்டுகால நண்பர்கள். ஆனால் அவர் ஒருபோதும் டீ விற்றதில்லை.
பொதுமக்கள் மத்தியில் அனுதாபத்தை சம்பாதிப்பதற்காகவே டீ விற்றவன் என்ற இமேஜை அவர் பயன்படுத்திக் கொள்கிறார்” என்று தெரிவித்துள்ளார். இச்செய்தியை இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ளது.

மேலும், “மோடியின் அறிக்கைக்குப் பிறகு, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட மாட்டாது என்று ஆர்எஸ்எஸ் மூத்த தலைவர் பையாஜி ஜோஷி தெளிவாகக் கூறிவிட்டார். ஆர்.எஸ்.எஸ், பாஜக என இரு குழுக்களும் 125 கோடி இந்தியர்களை இருட்டில் வைத்திருக்கின்றன. ஆனால் நாட்டிலுள்ள இந்துக்கள் தற்போது விழித்துக் கொண்டுவிட்டனர்” என்று கூறினார்.
வரும் பிப்ரவரி 9ஆம் தேதி இந்துக்களுக்காக தனிக்கட்சி ஆரம்பிக்கப்போவதாகவும் கட்சி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெற்றுவிட்டால், அடுத்த நாளே ராமர் கோயில் கட்டும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என்றும் தொகாடியா தெரிவித்துள்ளார். மோடி இரண்டாவது முறையாக பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் ராமர் கோயிலை கட்டமாட்டார் என்று தெரிவித்த அவர், ஏனெனில் இப்பிரச்சினை ஆர்எஸ்எஸ், பாஜகவின் உயிர்நாடிப் பிரச்சினையாக உள்ளது. இது முடிந்துவிட்டால் இரு அமைப்புகளும் ஒன்றுமில்லாமல் போய்விடும். 2019 தேர்தலில் தோற்ற பிறகு மோடி குஜராத்துக்கும், பையாஜி ஜோஷி நாக்பூருக்குமே திரும்பிச் சென்றுவிடுவர் என்றும விமர்சித்தார்.
மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல், அவரை தொகாடியா தொடர்ந்து விமர்சனம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக