வியாழன், 31 ஜனவரி, 2019

ராஜஸ்தானில் வேலையற்ற ஆண்களுக்கு ரூ.3000 .. பெண்களுக்கு ரூ.3500 சம்பளம் காங்கிரஸ் அரசு அறிவிப்பு

Rajasthan introduces Minimum Salary scheme after Rahuls bold announcement tamil.oneindia.com-shyamsundar: டெல்லி: அனைவருக்கும் குறைந்தபட்ச வருமானம் வழங்கும் திட்டம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மாநிலத்தில் முதற்கட்டமாக அமலுக்கு வர இருக்கிறது.
இந்தியாவில் உள்ள அனைத்து ஏழைகளுக்கும் சமமாக குறைந்தபட்ச வருமானம் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இது உடனடியாக நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார். இது பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வேலை பார்க்காத மக்கள் அனைவருக்கும் வேறுபாடு இன்றி இந்த சம்பளம் அளிக்கப்படும் என்று அவர் கூறி உள்ளார்.
இந்த நிலையில் இந்த திட்டம் தற்போது ராஜஸ்தானில் அமலுக்கு வர இருக்கிறது. ராஜஸ்தானில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்தது. இதனால் அஷோக் கேக்லாட் ராஜஸ்தான் முதல்வராக பொறுப்பேற்றார்.

தற்போது ராஜஸ்தானில் வேலையில்லாதவர்களுக்கு சம்பளம் திட்டம் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் ராஜஸ்தான் முதல்வர் அஷோக் கேக்லாட் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் கனவு ராஜஸ்தானில் இருந்து நிறைவேற்றப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
அதன்படி ஆண்களுக்கு ரூ.3000 சம்பளம் வழங்கப்படும். பெண்களுக்கு ரூ.3500 சம்பளம் வழங்கப்படும், என்று கூறி இருக்கிறார். எந்த வேறுபாடும் இன்றி இந்த சம்பளம் வேலை இல்லாதவர்களுக்கு வழங்கப்பட இருக்கிறது.
இந்த திட்டம் மார்ச் 1 முதல் செயல்படுத்தப்படும் என்று அஷோக் கேக்லாட் தெரிவித்துள்ளார். இது ராஜஸ்தானில் பெரிய வரவேற்பை பெற்று இருக்கிறது. லோக்சபா தேர்தலில் இந்த அறிவிப்பு பெரிய திருப்பத்தை கொண்டு வர வாய்ப்பு இருக்கிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக