புதன், 30 ஜனவரி, 2019

மறதி நோய்; 25 கோடி சொத்து!’ – ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் இறுதிக்காலம் எப்படி இருந்தது?


`மறதி நோய்; 25 கோடி சொத்து!’ – ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் இறுதிக்காலம் எப்படி இருந்தது?
jeya_-1_16407 `மறதி நோய்; 25 கோடி சொத்து!’ - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் இறுதிக்காலம் எப்படி இருந்தது? `மறதி நோய்; 25 கோடி சொத்து!’ - ஜார்ஜ் ஃபெர்னாண்டஸின் இறுதிக்காலம் எப்படி இருந்தது? jeya  1 16407விகடன்  : ` டெல்லியில் கிருஷ்ண மேனன் மார்க் பகுதியில்தான் மறைந்த முன்னாள் ராணுவ அமைச்சர் ஜார்ஜ் பெர்னான்டஸின் வீடு அமைந்திருந்தது. 1971-ம் ஆண்டு முன்னாள் மத்திய அமைச்சர் ஹூமாயூன் கபீரின் மகள் லெய்லாவை மணந்தார்.
13 ஆண்டுகளுக்குப் பிறகு, 1984-ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர். ஆனால், முறைப்படி விவகாரத்து பெறவில்லை. ஆனால், அனைத்து ஆவணங்களிலும் மனைவியின் பெயராக லெய்லாவையே பெர்னான்டஸ் குறிப்பிட்டிருந்தார். இதற்கிடையே, சமதா கட்சியை ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் தொடங்கினார்.
இந்தக் காலகட்டத்தில் ஜெயா ஜேட்லி சமதா கட்சியில் தீவிரமாக பணியாற்றினார்.
ஜெயா ஜெட்லிக்கும் பெர்னான்டசுக்கும் நெருக்கம் ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர். 2010-ம் ஆண்டு ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் அல்சைமர் (alzheimer’s disease) என்கிற மறதி நோயால் பாதிக்கப்பட்டார்.

இந்தச் சமயத்தில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு, லெய்லா மீண்டும் ஜார்ஜ் பெர்னான்டஸுடன் வந்து சேர்ந்துகொண்டார். மகன் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்துகொண்டு ஜெயா ஜெட்லியை, ஜார்ஜ் பெர்னான்டஸை பார்க்க அனுமதிக்கவில்லை.
ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீட்டு முன்பு நின்று ஜெயா ஜெட்லி சண்டையிட்டுச் செல்வதாகவும் சொல்லப்பட்டது. ஜெயா ஜெட்லி நீதிமன்றத்தை அணுகினார். ஒவ்வொரு 15 நாள்களுக்கும் ஒரு முறை 15 நிமிடங்கள் ஜெயா ஜெட்லியை ஜார்ஜ் ஃபெர்னாண்டஸை பார்க்க அனுமதிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.


இதற்கிடையே ஃபெர்னாண்டஸை கிருஷ்ண மேனன் மார்க் பகுதி வீட்டில் இருந்து டெல்லி பஞ்சசீல பூங்கா பகுதியில் உள்ள மற்றோரு வீட்டுக்கு அவரின் மனைவி கொண்டு சென்றார். பெர்னான்டஸுக்கு ரூ. 25 கோடி சொத்து உள்ளது, அதைக் கைப்பற்றவே சண்டை ஏற்படுவதாகச் சொல்லப்பட்டது. எமர்ஜென்ஸி காலத்தில் இந்திராவுக்கே சவால்விட்ட ஃபெர்னாண்டஸ் 10 ஆண்டுகளாகத் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாமல் இருந்தார்.

பெர்னான்டஸின் மீது அக்கறைக் கொண்டவர்கள், கிருஷ்ண மேனன் மார்க் வீட்டில் இருந்து ஃபெர்னாண்டஸை கடத்தி விட்டதாக புகார் தெரிவித்தனர். ஃபெர்னாண்டஸின் சகோதரர்கள் மைக்கேல், ரிச்சர்ட் ஆகியோர் அவரின் சொத்துகளை அபகரிக்க மனைவி லெய்லா முயல்வதாகக் குற்றம் சாட்டினர்.
லெய்லா தரப்பு, ஜெயா ஜெட்லியுடன் சேர்ந்துகொண்டு ஃபெர்னாண்டஸின் சகோதரர்கள்  சொத்துகளைப் பறிக்க முயல்கின்றனர் என்று குற்றம் சாட்டியது.

ஃபெர்னான்டஸை மறைத்து வைத்திருப்பதாக ஜெயா ஜெட்லியும் அவரின் சகோதரர் மைக்கேலும் மீணடும் நீதிமன்றத்தை அணுகினர். தொடர்ந்து இவர்கள் இருவரையும் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸிடம் அழைத்துச் செல்லுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மைக்கேல் தன் சகோதரர் பிறந்த தினத்தில் ஒருமுறை அவரைச் சந்திக்கச் சென்றார். தாய் மொழியான கொங்கணியில் ஃபெர்னாண்டஸிடத்தில் பேசினார். ஆனால், தாய் மொழிகூட ஃபெர்னாண்டஸுக்கு மறந்துவிட்டது.
அல்சைமர் நோய் அவரை அந்தளவுக்கு உருக்குலைத்துப் போட்டிருந்தது. மங்களுரைச் சேர்ந்த ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் 1950-ம் ஆண்டு வீட்டைவிட்டு வெளியேறி மும்பைக்கு ரயில் பிடித்தார். ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ் வீட்டுக்கு மூத்த மகன். எனவே, இவரைப் பாதிரியாராக்க தந்தை முடிவு செய்திருந்தார். தந்தையின் முடிவு பிடிக்காமல் வீட்டைவிட்டு வெளியேறிய ஃபெர்னாண்டஸுக்கு மும்பை உடுப்பி ஹோட்டல்கள்தான் அடைக்கலம் கொடுத்தது.
மும்பையின் பிரபல யூனியன் தலைவர் டி மெல்லோவின் ஆதரவு கிடைத்தது. அப்போது, மும்பையில் மில்கள் அதிகம் இருந்தன. மில் தொழிலாளர்களை ஒருங்கிணைத்து பெரும் போராட்டங்களை நடத்தினார் ஃபெர்னாண்டஸ். 1967-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மும்பையின் பவர்ஃபுல் மனிதர் எஸ்.கே.பாட்டீலை ஃபெர்னாண்டஸ் தோற்கடித்த பிறகு, இந்தியாவே அவரை உற்று நோக்கத் தொடங்கியது.<

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக