திங்கள், 10 டிசம்பர், 2018

மூச்சு விட முடியல” கசோக்கியின் கடைசி வார்த்தை!

“மூச்சு விட முடியல” கசோக்கியின் கடைசி வார்த்தை! NDTV : கசோக்கியின் உடல், வெட்டப்பட்ட நிலையில் துருக்கியை விட்டு வெளியேற்றப்பட்டதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.>சவுதி அமீரகத்துக்குள் கொல்லப்பட்டார் என்று கூறப்படும் பத்திரிக்கையாளர் கடைசியாக ''என்னால் மூச்சு விடமுடியவில்லை'' என்று பேசியுள்ளார் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது. ஆடியோ டேப்பின் ட்ரான்ஸ்கிரிப்டில் இந்த விஷயம் இருந்ததாக நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.
அந்தத் தகவலில், இது திட்டமிடப்பட்ட கொலை என்றும் அதற்கு நிறைய போன் கால் ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ரியாத்தில் உள்ள உயர் அதிகாரிகள்தான் இந்தப் போன்கால்களில் பேசியுள்ளனர் என்று சிஎன்என் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 2ம் தேதி இஸ்தான்புல்லில் உள்ள சவுதி அமீரகத்துக்கு சென்ற கசோக்கி மர்மமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இவர் சவுதி மன்னரை பற்றி விமர்சித்து செய்தி வெளியிட்டதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
சவுதியிலிருந்து 15 பேர் கொண்ட குழு அரசு விமானம் மூலம் அக்டோபரில் இஸ்தான்புல் அமீரகத்துக்கு சென்றுள்ளது. அவர்கள் கசோக்கியை கொலை செய்யும் நோக்கத்தில் தான் இஸ்தான்புல் வந்ததாக கூறப்படுகிறது.
அவர்களோடு பிரேதத்தை சுத்தப்படுத்தும் இருவரும் வந்ததாக கூறப்பட்டது.
மேலும் கசோக்கி கொலை செய்யப்பட்ட நான்கு அல்லது ஐந்து மணி நேரத்துக்குள் அவரின் உடல் வெட்டப்பட்ட நிலையில் துருக்கியை விட்டு வெளியேற்றப்பட்டதாக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன.
"கொலை செய்தவர்கள் கசோக்கியின் உடலை ஆசிட்டில் கரைத்துவிட்டார்களா" என்ற விசாரணையும் நடந்து வருகிறது
மேலும் இந்தக் கொலை தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை குற்றம் சாட்டுகிறார். "இளவரசர் தான் கொலைக்கு உத்தரவிட்டார்" என்று சிஐஏ தெரிவித்துள்ளது.

COMMENT
இந்தக் கொலை ரியாத்தின் சர்வதேச வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. மேற்கத்திய நாடுகளாக அமெரிக்கா, ப்ரான்ஸ் மற்றும் கனடா சவுதி மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக