திங்கள், 24 டிசம்பர், 2018

மாயாவதி ஆணவ கொலைகளுக்கு எதிராக மாபெரும் இயக்கத்தை உருவாக்கி இருக்கலாம் .. ஆனால் செய்யவில்லை

பெரிதாக பார்க்க கிளிக் செய்யவும்
Don Vetrio Selvini : கடந்த 2014 முதல், தற்போது 2018 வரை ராஜ்யசபாவில்
"ஆணவக் கொலை" மற்றும் அதற்கான சட்டம் குறித்து கேள்வி எழுப்பிய பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பிக்களின் பட்டியல்.
எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், தலித் விரோதியாக சித்தரிக்கப்படும் திமுக கூட, தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என்று பிஜேபி அரசை வற்புறுத்தியுள்ளது.
ஆனால், தலித்களின் பாதுகாவலனாக் காட்டிக் கொள்ளும் மாயாவதி, ராஜ்ஜிய சபாவில் , ஆணவக் கொலை குறித்து கேள்வியோ அல்லது சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானமோ அல்லது தனிநபர் சட்டமோ கொண்டு வரவில்லை. இத்தணைக்கும் நாட்டிலேயே அதிகமாக ஆணவக் கொலைகள் நடப்பது மாயாவதி மூன்று முறைக்கும் மேல் முதல்வராக இருந்த உத்திர பிரதேசத்தில் தான்.
மாயாவதி நினைத்திருந்தால், ஆணவக் கொலைக்கு எதிராக நாடு தழுவிய இயக்கத்தை ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால், ஏனோ செய்யவில்லை. என்ன காரணமோ? ஒருவேளை திமுக ஏதும் தடுத்ததோ? கன்ஷிராம் அவர்களுக்கே வெளிச்சம்.
Anand Krishnan 1996ல் பார்ப்பனர்களின் சதவிகிதம் 3.70 அதுவே 2012ல் 19%. தாழ்த்தப்பட்ட மக்கள் 1996ல் 60 அதுவே 2012ல் 47%. இதிலிருந்து அறிய வருவது மாயாவதி முதல்வர் ஆனதால் அங்கு எவ்வித சமூக மாற்றம் நிகழ வில்லை. ஆனால் தமிழகத்தில் திராவிட இயக்கம் பல சமூக மாற்ற திட்டங்களை செயல்படுத்தியது. அதன் விளைவு தான் கனிமொழி அவர்கள் ஆணவ கொலைக்கு எதிராக பேசியது. அதனையெல்லாம் மாயாவதி முன்னெடுத்தது கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக