திங்கள், 17 டிசம்பர், 2018

வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை மிரள வைத்த சென்னை இளைஞர்

வீடு புகுந்து பெண்களை மிரட்டி பலாத்காரம் - போலீசாரை அதிர வைத்த இளைஞரின் பகீர் வாக்குமூலம்தினத்தந்தி :அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
 சென்னை, அம்பத்தூரில் வீடு புகுந்து கொள்ளை மற்றும் பலாத்காரத்தில் ஈடுபட்டு வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அம்பத்தூர் தொழிற்பேட்டை, கொரட்டூர், முகப்பேர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் வீட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த புகாரில், அம்பத்தூர் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தநிலையில், பட்டரைவாக்கத்தில் நேற்றிரவு வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு இளைஞரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்த அவரை, அம்பத்தூர் காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த நபர், ஆவடியை அடுத்த திருமுல்லைவாயலை சேர்ந்த அறிவழகன் என்பதும், அவர் மீது வேளச்சேரி, கிண்டி குமரன் நகர் காவல் நிலையங்களில் 15 க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

மேலும், வீடு புகுந்து திருடுவது, வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை மிரட்டி பலாத்காரத்தில் ஈடுபட்டது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததையும், விசாரணையில் அறிவழகன் ஒப்புக்கொண்டதாக போலீசார் கூறினர். இதையடுத்து, அறிவழகனிடம் இருந்து 25 சவரன் தங்க நகை மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக