வியாழன், 13 டிசம்பர், 2018

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது அரசியல் சட்டத்திற்கு எதிரானது.. உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

srilanaka supreme court says sirisena s decision to dissolve parliament was unconstitutional and illegalSamayam Tamil | :இலங்கை நாடாளுமன்ற கலைத்தது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என அந்நாட்டு உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது. இதனால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டத்தை எதிர்த்து ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய ஊட்டமைப்பு ஆகியா கட்சிகளின் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில்,இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்‌ஷே அரசுக்கு எதிராக முன்மொழியப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிப்பெற்றுள்ளது. அதனால் அவரது அரசு செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரப்பட்டது.
இந்த வழக்கை இன்று விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்ட விரோதமானது.
நான்கரை ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது. முன்னரே கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லது என நீதிபதிகள் அமர்வு அதிரடு தீர்ப்பு வழங்கியுள்ளது.

முன்னதாக, இலங்கை பிரதமராக இருந்து வந்த ரணில் விக்ரமசிங்கேவை நீக்கிவிட்டு அப்பதவியில் ராஜபக்‌ஷேவை அதிபர் சிறிசேனா நியமித்தார். மேலும், அடுத்த மாதம் இலங்கை நாடாளுமன்றத்துக்கு தேர்தல் நடத்தப்படும் என்றும் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம் நாடாளுமன்றம் கலைப்பு அடுத்தாண்டு தேர்தல் உள்ளிட்ட அறிவிப்புகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இலங்கை நாடாளுமன்றத்தில் ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே கட்சியால் 3 முறை நம்பிக்கையில்லா தீர்மானங்கள் கொண்டுவரபப்ட்டன. அதில் ராஜபக்சே அரசு தோற்றுப்போனது. எனினும் ராஜபக்சே பதவி விலக மறுத்துவிட்டார். இதனால் இலங்கை அரசியில் தொடர்ந்து குழப்பம் நிலவி வந்தது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக