சனி, 1 டிசம்பர், 2018

விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு வைத்த பெண் மீது போக்சோ வழக்கு பதிவு


காயத்ரி தம்மை லெஸ்பியன்  உறவுக்கு அழைத்ததாகவும் விஸ்வதர்ஷினி குற்றம்சாட்டியிருந்தார்.
tamil.indianexpress.com/ நடிகர் விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்திய பெண் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.< விஷால் மீது பாலியல் குற்றச்சாட்டு : சென்னை கோபாலபுரத்தைச் சேர்ந்த விஸ்வதர்ஷினி என்ற பெண், தனது வீட்டில் இருந்து நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு சுவர் ஏறி குதித்து தப்பி ஓடியதாக ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அந்த பெண் மீது தற்போது  பாக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது டான்ஸர் காயத்ரி புகார் கூறியிருந்தார். இந்த டான்ஸர் காயத்ரியின் நெருங்கிய நண்பராக இருந்தவர் விஸ்வதர்ஷினி. சமீபகாலமாக காயத்ரிக்கும் விஸ்வதர்ஷினிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து டான்ஸர் காயத்ரி குறித்து பல்வேறு தகவல்களை சமூக வலைதளங்களில் விஸ்வதர்ஷினி பதிவிட்டு வருகிறார்.அதில், காயத்ரி தம்மை லெஸ்பியன் உறவுக்கு அழைத்ததாகவும் விஸ்வதர்ஷினி குற்றம்சாட்டியிருந்தார்.

அதனை தொடர்ந்து கடந்த 11-ம் தேதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில், நடிகர் விஷால் அதிகாலை 4 மணிக்கு காயத்ரி வசித்த கோபாலபுரம் அபார்ட்மெண்ட்டின் மதில் சுவர் ஏறி குதித்து வெளியேறியதாகவும் இது தொடர்பான சிசிடிவி பதிவை அந்த அபார்ட்மெண்ட்டின் உரிமையாளர் ராவ் என்பவர் தம்மிடம் கொடுத்ததாகவும் விஸ்வதர்ஷினி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அந்த வீட்டில் வசிக்கும் 16 வயது சிறுமி பாலியல் ரீதியாக தன்னை பற்றியும் அவதூறு பேசியதாக தேசிய குழந்தைகள் ஆணையத்துக்கு விஸ்வதர்ஷினி புகார் அளித்துள்ளார்.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையருக்கு தேசிய குழந்தைகள் ஆணையம் உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியிடம் வாக்கு மூலம் பெற்று விசாரணை நடத்தியது. அதில் குழந்தை அளித்த புகார் உண்மையானதால் ராயப்பேட்டை போலிசார் போக்சோ சட்டத்தின் கீழ் விஸ்வதர்ஷினி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக