செவ்வாய், 4 டிசம்பர், 2018

விஜயகுமாரி : ஜெயலலிதாவுக்கு சிக்கனும் ஆயில் மசாஜும் ரொம்ப பிடிக்கும்

jaya_sad_5_18055_12515 ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி jaya sad 5 18055 12515`vikatan :நல்ல குடும்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமா வாழ்ந்திருக்க வேண்டிய பொண்ணு. அரசியலுக்கு வந்து, தன் சந்தோஷத்தைக் கெடுத்துக்கிட்டாங்கனுதான் சொல்லுவேன்.
sds_16309-629x420 ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி sds 16309அதனால, என் அண்ணன் எம்.ஜி.ஆர் மேலதான் எனக்குக் கோபம் வரும். இதை வெளிப்படையாவே சொல்வேன்.”
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகளும் சந்தேகங்களும் நின்றபாடில்லை; அதற்கெல்லாம் தீர்வும் கிடைத்தபாடில்லை.
இந்நிலையில் அவரின் இரண்டாம் ஆண்டு நினைவுதினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா தன் இளமைக்காலம் முதலே சிலரைத் தவிர, மற்றவர்களுடன் அதிகம் பழக மாட்டார்; நட்புடன் இருக்கமாட்டார் என்பது அவருடன் பயணித்த பலரின் கூற்றாக உள்ளது.
அதனாலேயே அவர் இறப்புக்குப் பிறகும் சர்ச்சைகள் எழுந்தவண்ணம் உள்ளன. ஜெயலலிதாவுடன் பழகிய கடந்த கால நினைவுகளைப் பகிர்கிறார், நடிகை விஜயகுமாரி.
13 வயது பொம்மையாக ஜெயலலிதா!
“நான் ஹீரோயினாக பிஸியாக நடிச்சுகிட்டு இருந்தபோது, பல படங்கள்ல எனக்கு அம்மா, அத்தை மாதிரியான வேடங்கள்ல சந்தியா (ஜெயலலிதாவின் அம்மா) நடிச்சாங்க.
அப்போ என்கூட ரொம்ப நல்லாப் பழகின சந்தியா, தன் இன்ப துன்பங்களை என்னிடம் பகிர்ந்துப்பாங்க.
ஆனா, தன் குழந்தைகள் மற்றும் குடும்ப வாழ்க்கை பத்தி எதுவும் பேச மாட்டாங்க. என்ன காரணமோ தெரியலை!
சந்தியா, ஜெயலலிதாவை வெளியிடங்களுக்கு அதிகம் கூட்டிட்டு வரமாட்டாங்க; மகளை சினிமாவுக்கு வரவிடக் கூடாதுனு நினைச்சாங்க.
ஆனா, ஒருமுறை டப்பிங் தியேட்டருக்கு ஜெயலலிதாவைக் கூட்டிட்டு வந்தாங்க. அப்போ ஜெயலலிதாவுக்கு 13 வயசு இருக்கும்னு நினைக்கிறேன்.
பொம்மை மாதிரி சிரிக்காம, பேசாம அமைதியா உட்கார்ந்துட்டு இருந்தாங்க. அதுதான் ஜெயலலிதாவுடனான என் முதல் சந்திப்பு.
273380_11125_12557 ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி 273380 11125 12557
ஃபுரூட் ஜூஸ்… வெண்ணெய் மசாஜ்!
`கணவன்’, `தேர்த்திருவிழா’, `சவாலே சமாளி’, `அன்பைத் தேடி’, `மணி மகுடம்’, `காக்கும் கரங்கள்’, `சித்ரா பெளர்ணமி’ உட்பட பல படங்கள்ல நானும் ஜெயலலிதாவும் சேர்ந்து நடிச்சோம்.
தான் உண்டு, தன் வேலை உண்டுனு இருக்கும் ஜெயலலிதா, ஷூட்டிங் நேரத்துக்குச் சரியா வந்திடுவாங்க.
யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டாங்க. ஒருமுறை டயலாக்கைப் படிச்சுட்டு டேக் போய்டுவாங்க.
ஷூட்டிங் ஸ்பாட்ல ஓய்வுநேரத்தில் எந்த நொறுக்குத்தீனியும் சாப்பிட மாட்டாங்க; ஆனா, புக்ஸ் படிச்சுகிட்டே இருப்பாங்க.
தன்னைவிட வயசுல, புகழில் உயர்ந்தவங்க யார் அருகில் இருந்தாலும் சரி. தைரியமா கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பாங்க.
தனக்குப் பிடிச்சவங்ககிட்ட மட்டும், பிடிச்ச விஷயங்களைப் பகிர்ந்துப்பாங்க. ஜெயலலிதானாலே எனக்கு `ஹெல்த் கான்ஷியஸ்’தான் நினைவுக்கு வரும்.
உடல்நிலையைக் கட்டுக்கோப்பாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள ரொம்ப மெனக்கெடுவார். அவர் ரெகுலரா வெண்ணெய் தேய்ச்சுக் குளிப்பார்.
அதுதான் தன் அழகுக்குக் காரணம்னு என்னிடம் சொல்லியிருக்கார். தினமும் உடற்பயிற்சி செய்வார்.
அதையெல்லாம் செய்யச் சொல்லி என்கிட்டச் சொல்வாங்க. சிக்கன் அவருக்கு ரொம்பப் பிடிச்ச உணவு. ஆனா, மதியம் சாப்பிட மாட்டார். வெறும் ஃப்ரூட் ஜூஸ்தான் குடிப்பார்.
நகைகள் மீது அதிக ஈடுபாடு கொண்டவர், அதைப் பத்தி அடிக்கடி எங்கிட்டப் பேசுவார். ஒருமுறை போயஸ் கார்டன் போனேன். தன் வீட்டை எனக்குச் சுத்திக்காட்டினார்.
v4_05270_12139 ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி v4 05270 12139
கருணாநிதி தலைமையில்… ஜெயலலிதாவுக்குப் பாராட்டு விழா!
நூறு படங்களில் நடிச்ச நிலையில, ஜெயலலிதாவுக்கு ஒரு பாராட்டு விழா நடந்துச்சு. அந்நிகழ்ச்சியில் கலந்துக்க சந்தியாவும், ஜெயலலிதாவும் என்னை அழைச்சிருந்தாங்க.
கலைஞர் கருணாநிதி தலைமையில் நடந்த அந்நிகழ்ச்சியில், ஜெயலலிதாவுக்கு மலர் கிரீடமும் சால்வையும் அணிவிச்சேன்.
திடீர்னு, கலைஞர் என்னை ஜெயலலிதாவைப் பத்திப் பேசச் சொல்லிட்டார். `முதல் சந்திப்பில் ஜெயலலிதா சிரிக்காம அமைதியா இருந்தாங்க.
ஆனா, நடிகையாகி, குறுகிய காலத்துல 100 படங்கள்ல நடிச்சுட்டாங்க. மிகத் திறமையான நடிகையான இவர், வருங்காலத்தில் இந்திராகாந்தி மாதிரி போல்டான பெண்ணாக உருவானாலும் ஆச்சர்யப்படுத்துவதற்கு இல்லை’னு சொன்னேன். பிற்காலத்தில் நான் சொன்னதுபோலவே நடந்துச்சு.
8p1_1531288004_12368 ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி 8p1 1531288004 12368
என் அண்ணன் எம்.ஜி.ஆர் மேல்தான் கோபம்!
நான் எப்பவும் மத்தவங்க விஷயத்துல அதிகம் தலையிடமாட்டேன். என்னைப் போலவே ஜெயலலிதாவும் இருப்பதாக நினைச்சுப்பேன்.
அதனாலதான், 70-களின் இறுதியில் ஜெயலலிதாவின் வாழ்வில் நடந்த விஷயங்களைப் பத்திக் கண்டுக்காம இருந்தேன்.
ரொம்ப அழகான, திறமையான பொண்ணு. நல்ல குடும்ப வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்து சந்தோஷமா வாழ்ந்திருக்க வேண்டிய பொண்ணு. அரசியலுக்கு வந்து, தன் சந்தோஷத்தைக் கெடுத்துக்கிட்டாங்கனுதான் சொல்லுவேன்.
அதனால, என் அண்ணன் எம்.ஜி.ஆர் மேலதான் எனக்குக் கோபம் வரும். இதை வெளிப்படையாவே சொல்வேன். அவர் மட்டும் ஜெயலலிதாவை அரசியலுக்கு அழைச்சுட்டு வரலைன்னா, அவங்க நிம்மதியான வாழ்க்கையை வாழ்ந்திருப்பாங்க.
முழுநேர அரசியல் என்பது பாலைவனம் மாதிரி. அதில் நுழைஞ்சுட்டாலே குடும்ப வாழ்க்கையில பெரிசா கவனம் செலுத்த முடியாது.
ஜெயலலிதாவுக்கும் அப்படித்தான் ஆச்சு. ஆனா, அரசியலில் தன் திறமையை நிரூபித்து, ஜெயலலிதா இரும்புப் பெண்மணியா இருந்தாங்க என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
jaya_2_15231_12509-696x560 ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி jaya 2 15231 12509
எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வலம்…. ஜெயலலிதாவுடன் கடைசி உரையாடல்!
1987-ல் என் அண்ணன் எம்.ஜி.ஆர் இறந்ததும் ஜானகி அக்கா எனக்குத் தகவல் சொல்ல, ராமாவரம் தோட்டத்துக்கு உடனே போனேன்.
சோகத்துடன் இறுதிக்காரிய நிகழ்வுகளைச் செய்தேன். விடியற்காலையில் ஜெயலலிதா அங்க வந்தாங்க. நீண்ட நாள் கழிச்சு அன்னைக்குத்தான் ஜெயலலிதாவைப் பார்த்தேன்.
`அவர் உடல் எங்கே?’னு கேட்ட ஜெயலலிதாகிட்ட, `அண்ணன் உடலை மாடியில `எம்பார்மிங்’ பண்ணிட்டு இருக்காங்க’னு சொன்னேன்.
அதுதான் அவருடன் என் கடைசி உரையாடல். பிறகு இறுதி ஊர்வலத்தில் நடந்ததும், அதற்குப் பிறகு நடந்த அரசியல் நிகழ்வுகளும் எல்லோருக்கும் தெரியும்.
அண்ணி ஜானகியுடன் நான் பாசத்தோடு இருந்ததும், தி.மு.க குடும்பத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், ஜெயாவுக்கு என் மேல மாற்றுக்கருத்து இருந்திருக்கலாம்.
அதனால்தான் முன்பு நாங்க நல்லாப் பழகியிருந்தாலும், அரசியலுக்கு வந்த பிறகு அவங்க என்னோடு பேசவோ, பழகவோ நினைக்கலை. நானும் அமைதியா இருந்துட்டேன்.
p6a_12192 ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி ''வெண்ணெய் மசாஜ் முதல் சிக்கன் வரை... ஜெயலலிதாவின் பிரியங்கள்!" நடிகை விஜயகுமாரி p6a 12192
அப்படி இருந்த ஜெயலலிதாவா… இப்படி?
1960,70-களில் நான் பார்த்த ஜெயலலிதாவுக்கும், அரசியல் பிரவேசத்துக்குப் பிறகான ஜெயலலிதாவுக்கும் உடல் அளவுல மிகப்பெரிய மாற்றம்.
பிட்னஸ் காதலியா இருந்த அவங்க எப்படி அதிக உடல் பருமனா ஆனாங்க, உடல்நலப் பாதிப்புகளை அண்ட விட்டாங்கங்கிறது நம்பமுடியாததா இருக்கு.
ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்ட அவர் உடலை டிவியில் பார்த்துக் கலங்கினேன். பிடிவாத குணம் அதிகம் கொண்டவங்க. அதைக் குறைச்சுட்டு இருந்திருந்தால், இன்னும் புகழ்பெற்றிருப்பாங்க; நல்லா வாழ்ந்திருப்பாங்க” என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார், விஜயகுமாரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக