புதன், 12 டிசம்பர், 2018

சந்திரசேகர ராவ் :ஸ்டாலின் மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்க வேண்டும்... மாநில கட்சிகள் ...

ஸ்டாலினுக்கு சந்திரசேகர் ராவ் வழங்கிய அறிவுரை!
மின்னம்பலம் : ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று (டிசம்பர் 11) நடைபெற்றது. இத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றது. மத்திய பிரதேசத்தில் காங்கிரஸுக்கும் பாஜகவுக்கும் இடையே இழுபறி நிலை உருவானது. மிசோரமில் மிசோ தேசிய முன்னணி ஆட்சியைப் பிடித்துள்ளது. தெலங்கானாவில் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் வெற்றிக்குப் பிறகு தேசிய அரசியலில் தீவிரமாகச் செயல்படப் போவதாக சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஸ்டாலினுக்கு ஓர் அறிவுரை வழங்கியிருப்பதாகவும் சந்திரசேகர ராவ் தெரிவித்தார். நேற்று (டிசம்பர் 11) செய்தியாளர்களிடம் சந்திரசேகர் ராவ் பேசுகையில், “மாநில பலம் பெற்ற கட்சிகள் பாஜக அல்லாத அணி என்று ஏன் தற்போது குரல் எழுப்ப வேண்டும்?

நான் ஸ்டாலினைச் சந்தித்தபோது அவரிடம் பல கருத்துகளைத் தெரிவித்தேன். ஸ்டாலின் தனித்துப் போட்டியிட்டு வென்ற பிறகு மாநில சுயாட்சிக்காகக் குரல் கொடுக்க வேண்டும். பாஜக அல்லாத அணி என்று நாம் ஏன் முன்னரே அறிவிக்க வேண்டும்? அதற்கான அவசியம் தற்போது இல்லை” என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக