சனி, 15 டிசம்பர், 2018

இந்திய ரூபாய் நோட்டுக்களுக்கு நேபாள அரசு தடை

இந்திய,ரூபாய் நோட்டு,பயன்படுத்த,நேபாள அரசு,தடைதினமலர் :காத்மாண்டு : நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள, 200 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, நேபாள மக்கள் பயன்படுத்த, அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது. நம் நாட்டில், 2016 நவ., 8ல், செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் பின், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் ஒழிக்கப்பட்டு, புதிதாக, 500 - 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன. இதைத் தொடர்ந்து, புதிய, 50 - 100 - 200 ரூபாய் நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. அண்டை நாடான, நேபாளத்தில், இந்திய ரூபாய் நோட்டுகளை கொடுத்து, கொள்முதல்
செய்யவோ அல்லது அந்நாட்டு கரன்சியாகவோ மாற்ற முடியும். இந்நிலையில் நேற்று, நம் நாட்டில் புழக்கத்தில் உள்ள, 200 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, நேபாள மக்கள் பயன்படுத்த, அந்நாட்டு அரசு திடீர் தடை விதித்துள்ளது.


இது குறித்து, 'தி காத்மாண்டு போஸ்ட்' பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், நேபாள தகவல் மற்றும் தொடர்புத் துறை அமைச்சர், கோகுல் பிரசாத் பஸ்கோடா கூறியதாவது: நேபாளத்தில், இந்திய அரசின், 200 - 500 - 2,000 ரூபாய் நோட்டுகளை, மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அந்நாட்டின் ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்துவதை, நேபாள மக்கள் நிறுத்த வேண்டும். இந்திய அரசின், 100 ரூபாய் நோட்டுகளை மட்டும், மக்கள் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆனால், எதற்காக இந்திய ரூபாய் நோட்டுகளை, நேபாள அரசு திடீரென தடை செய்துள்ளது என்பதற்கான காரணத்தை, அமைச்சர் கூற மறுத்து விட்டார். நேபாள அரசின் இந்த முடிவால், < இந்தியாவில் பணியாற்றும் நேபாள நாட்டவரும், நேபாளத்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களும் கடுமையாக பாதிக்கப்படுவர்.

இந்தியாவில் செல்லாத ரூபாய் நோட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட போது, நேபாளத்தில், கோடிக்கணக்கில் பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் தே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக