சனி, 22 டிசம்பர், 2018

கமல் காங்கிரஸ் எம்பி தொகுதிகளில் சிலதை கேட்கிறார்?.. நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட முடிவு!

டிஜிட்டல் திண்ணை: திமுக -காங். கூட்டணியில் கமல் போட்டி?மின்னம்பலம் : "அடுத்த கட்டம் என்ன என்பதில் தீவிரமாக யோசிக்க ஆரம்பித்துவிட்டார் கமல். மும்பையை சேர்ந்த ஒரு தனியார் சர்வே ஏஜென்சி மூலமாக சர்வே ஒன்றை எடுத்திருக்கிறார். அதில் தனித்து போட்டியிட்டால் வாக்கு சதவீதம் மிக குறைவாகவே இருக்கும் என சொல்லியிருக்கிறார்கள். அதன் பிறகே கூட்டணி பற்றி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்து இருக்கிறார்.
இன்று நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என அறிவித்தும் விட்டார் கமல். அவரது மனதில் இருந்தது காங்கிரஸ்தான். திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி வந்துவிடும்... காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம் என தனக்கு நெருக்கமானவர்களிடம் சொல்லி வந்தார் கமல்.

ஆனால், காங்கிரஸ்- திமுக கூட்டணி என்பது உறுதியாகி விட்டது. இதை கமல் எதிர்பார்க்கவில்லை. ஆனால், காங்கிரஸை தவிர்த்து வேறு கூட்டணி என்பது நாடாளுமன்ற தேர்தலில் சரியாக இருக்காது என நினைக்கிறாராம் கமல்.
அதனால், காங்கிரஸ் திமுகவுடன் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசுடன் உடன்படிக்கை செய்து கொண்டு நாம் காங்கிரஸுடன் கூட்டணி வைக்கலாம் என யோசிக்க ஆரம்பித்திருக்கிறாராம். அதாவது காங்கிரஸுக்கு ஒதுக்கும் சீட்டில் கமல் பங்கிட்டுக்கொள்வார். திமுகவுக்கும் கமலுக்கிம் சம்பந்தம் இல்லை. ஆனால் பிரசாரத்துக்கு மட்டும் எல்லா தொகுதிக்கும் போகலாம் என்பது கமல் திட்டமாம். அது தொடர்பாக காங்கிரஸுடன் விரைவில் பேசவும் திட்டமிட்டு இருக்கிறாராம்.
இதில் ஒரு சிக்கல் மட்டுமே... கமலுக்கு ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட திட்டம். அதே தொகுதிதான் திருநாவுக்கரசரும் யோசித்திருக்கிறாராம். அந்த சிக்கலை தவிர்த்தால் கூட்டணி ரெடி என்கிறார்கள் விவரமறிந்த கமல் நண்பர்கள் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக