புதன், 19 டிசம்பர், 2018

பூம்புகார் கடலில் குளித்த கல்லூரி மாணவிகள் மூவர் உயிரழப்பு !!

DEATHnakkheeran.in - selvakumar : பூம்புகார் கடலில் குளித்த கல்லூரி மாணவிகள் மூன்று பேர் சுழல் அலையில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்தனர். இரண்டு மாணவிகள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்றுவருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள ஞானாம்பிகை அரசு பெண்கள் கலைக்கல்லூரி பல ஆண்டுகளாக செயல்பட்டுவருகிறது. அந்த கல்லூரியில் உள்ள விடுதியில் தங்கிப்பயிலும் ஏழு மாணவிகள் இன்று தேர்வு முடிந்து விடுமுறை என்பதால் பூம்புகார் கடற்கரைக்கு  ஜாலியாக சென்றிருக்கின்றனர்.  மதியம் நேரம் என்பதால் கடலில் இறங்கி  குளித்துள்ளனர். அவர்கள் ஜாலியா விளையாடிய நிலையில், எதிர்பாராமல் வந்த ராட்சத சுழல் அலை அவர்களை  நிலைக்குளைய செய்தது.


கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு சேர்ந்த சிவப்பிரியா, நாகை மாவட்டம் பழையாறைச் சேர்ந்த மஞ்சு, மற்றும் விவேகா ஆகிய மூன்று மாணவிகள் அந்த அலையில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

DEATH

மீதமுள்ள மாணவிகளான சிதம்பரத்தைச் சேர்ந்த அஜினாபானு, கடலூரைச் சேர்ந்த சங்கீதா, ஆகிய இருவரையும் அருகில்  வலைகளை உலர்த்திக்கொண்டிருந்த  மீனவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். 

DEATHஇது குறித்து விசாரித்தோம், "ஏழு மாணவிகள் வந்திருக்கின்றனர். அதில் ஐந்து பேர் குளித்துள்ளனர், மீதமுள்ள கடலூரைச் சேர்ந்த அன்னலட்சுமி, காட்டு மன்னார்குடியைச்சேர்ந்த வினிதாவும் கரையில் உட்காரந்துக்கொண்டு ரசித்துள்ளனர். கடலில் குளித்த தோழிகள் அலையில் சிக்கிய அலறலைக்கண்டு சத்தம் போட்டுள்ளனர், அங்கு வலை சிக்குஉடைத்துக்கொண்டிருந்த மீனவர்கள் ஓடிவந்து ஐந்து பேரையும் மீட்டுக்கொண்டுவந்தனர். அதில் இரண்டுபேரை மட்டுமே காப்பாற்ற முடிந்திருக்கிறது. மீதமுள்ள மூன்றுபேர் சடலமாகவே தூக்கிவந்தனர். அவர்களது உடலை சீர்காழி அரசு பொது மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைத்துள்ளனர். 



உயிர்த்  தப்பிய  இரண்டு மாணவிகளையும் மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மூன்று மாணவிகளின் இறப்பு கடலோர மக்களை மட்டுமின்றி, மாணவியர் வட்டாரங்களிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக