செவ்வாய், 11 டிசம்பர், 2018

.பாஜகவின் அத்தனை மோசடிகளையும் மீறி வெற்றி பெற்ற எதிர்கட்சிகள்.. பிந்திய செய்தி ..

Swathi K : பிஜேபி ஆட்சி செய்யும் மூன்று மாநிலங்கள் காங்கிரஸ் கைக்கு 💐.
மாறுகிறது
பிஜேபியின் கோட்டைகள், இந்துத்துவா கூட்டம், ஆயிரக்கணக்கான பொய்யான போலி பிரச்சாரம், பிரதமர், பிஜேபி தலைவர், 7 மாநில பிஜேபி முதல்வர்கள் பிரச்சாரம், 25+ மத்திய அமைச்சர்கள் பிரச்சாரம், மதவெறி பிரச்சாரம், ராகுல் மற்றும் காங்கிரஸ் இந்துக்களை அவதூறு செய்வதாக நூற்றுக்கணக்கான போலி வீடியோக்கள் தயார் செய்து பரப்பினார்கள், ஆயிரக்கணக்கான கோடிகள் செலவு செய்தனர்..
பிரச்சாரம் முழுவதும் மோடி வாயில் வடை சுட்டார். மோடி அழுதார், மோடி தன்னை ஏழைத்தாயின் மகன் என்றார், ஆயிரம் பொய்கள் சொல்லி இருப்பார் கடந்த ஒரு மாதத்தில்.. கத்தினார், கதறினார்.. இந்திரா, நேரு, காந்தி என்று எல்லோரையும் அசிங்கப்படுத்தினார்..
பிஜேபி MLA வீட்டில் EVM கண்டுபிடிப்பு, பிஜேபி மாவட்ட தலைவர் ஹோட்டலில் EVM கண்டுபிடிப்பு, ரோட்டில் EVM கண்டுபிடிப்பு, EVM பாதுகாப்பு அறையில் 2 பிஜேபி பிரமுகர்கள் லேப்டாப்'புடன் பிடிபட்டனர், EVM பாதுகாப்பு அறையில் சில மணி நேரம் பவர்கட்.. அதனால் CCTV இயங்கவில்லை.. EVM வேலை செய்யவில்லை என்று மத்திய பிரதேசத்தில் மட்டும் 4500 EVM மாற்றப்பட்டது. போலியான வாக்காளர்கள் இணைப்பு, சிறுபான்மை இனமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் லிஸ்டில் விடுபட்டனர்.
இன்னும் எவ்வளவோ EVM கோல்மால்கள்..
இவ்வளவு கோல்மால் செய்தும் வெற்றி பெற முடியவில்லை.. மிக மோசமான தோல்வி மோடிக்கு..
விவரமான பதிவு முழு முடிவு தெரிந்த பின்பு..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக