செவ்வாய், 4 டிசம்பர், 2018

மைதா என்னும் எமன்!

மைதா என்னும் எமன்!மின்னம்பலம் :தினப் பெட்டகம் - 10 (4.12.2018) மைதா மாவு பற்றி இங்கு காண்போம்...
1. மைதா கோதுமையில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
2. கோதுமை தானியங்களின் மாவுப் பகுதியில் (starchy) இருந்துதான் மைதா தயாரிக்கப்படுகிறது.
3. தானியத்தில் இருக்கும் endosperm எனும் பகுதிதான் மைதா செய்யப் பயன்படுகிறது.
4. ஒரு தானியத்தில் சத்தான தோல் மற்றும் பிற பகுதிகள் மைதா தயாரிப்பில் சேர்க்கப்படுவது கிடையாது.
5. மைதா தயாரித்ததும் இளம் மஞ்சள் நிறத்தில்தான் இருக்கும். அதை வெண்மையாக்க ப்ளீச் பயன்படுத்தப்படுகிறது.
6. ப்ளீச் செய்ய பல நாடுகளில் Benzoyl Peroxide பயன்படுத்தப்படுகிறது. இது ஐரோப்பா தொடங்கிய பல நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
7. ப்ளீச் செய்யும்போது, alloxan எனப்படும் ஒரு பொருள் மைதாவில் மிஞ்சுகிறது. இந்த அல்லோக்ஸன் தான் நீரிழிவு உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம்.
8. பிரெட், கேக் உட்பட நாம் உண்ணும் பெரும்பாலான ஃபாஸ்ட் ஃபுட் வகைகளில் மைதா தவிர்க்க இயலாத ஒரு பொருளாகும்.
9. மைதாவில் சத்து என்பதே சிறிதளவும் கிடையாது!
10. மைதா என்பதே மிக நுட்பமாகச் சுத்திகரிக்கப்பட்ட மாவு (refined flour) என்பதால், அதில் நார்ச்சத்து கிடையாது.
- ஆஸிஃபா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக