வியாழன், 27 டிசம்பர், 2018

மம்தா பானர்ஜி : திட்டத்திற்கு மாநிலத்தின் நிதி, நற்பெயர் மட்டும் மத்திய அரசுக்கா?:

திட்டத்திற்கு மாநிலத்தின் நிதி, நற்பெயர் மட்டும் மத்திய அரசுக்கா?: மம்தா பானர்ஜி வேதனை மாலைமலர் : திட்டத்திற்கான பெரும்பகுதி நிதியை மாநில அரசு ஒதுக்கும் நிலையில், நற்பெயர் மட்டும் மத்திய அரசுக்கா? என்று மம்தா பானர்ஜி வேதனை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெற்கு 23 பர்கனாஸ் மாவட்டத்தில் நடைபெற்ற நிர்வாக ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதாவது:-
பெரும்பாலான திட்டத்திற்கு மாநில அரசு 80 சதவிகிதம் நிதியை அளிக்கிறது. ஆனால் மத்திய அரசு திட்டத்திற்கான நற்பெயரை தட்டிச்சென்று விடுகிறது. ஏன் இது நடக்க வேண்டும்?. பழைய பெயர்கள் மாற வேண்டும். பிரதான் மந்திரி கிராம் சடாக் யோஜனா திட்டத்தின் பெயர் பங்க்ளா சடாக் யோஜனா என பெயர் மாற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு எதார்த்தம் தெரியவரும். இதுபோன்ற விவகாரத்தில் நாங்கள் ஒட்டுமொத்த திட்டத்திற்கும் பொறுப்பேற்க இருக்கிறோம்.


விவசாயிகளுக்கு நாம் பணம் செலவழிக்கும்போது, பாஜனதா தாங்கள் செய்ததாக கூறுகிறது. அவர்கள் இதுபோன்ற அரசியல் செய்ய முடியாது.

இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

விவசாயிகளின் பயிர் காப்பிட்டு திட்டத்திற்கு மத்திய அரசு பணம் செலுத்துவதாக மத்திய அரசு தவறான கருத்தை பரப்பி வருகிறது. ஆனால் மாநில அரசு 80 சதவிகித பணம் செலுத்துகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக