செவ்வாய், 4 டிசம்பர், 2018

தமிழ்நாட்டை , ஒரு சுருட்டு பத்தி முடிவதற்குமுன் கைப்பேற்றுவோம் இலங்கை ரா,,,.........

Ajeevan Veer : இலங்கையில் இனவாதத்தை புலிவாதத்தை உசுபேத்தி பெற
முடியாததை தமிழ் நாட்டை உசுப்பேத்தி மகிந்த தரப்பினர் பெற முயல்கிறார்கள் !
"இந்தியா அனுமதித்தால் தமிழ்நாட்டை , ஒரு சுருட்டு பத்தி முடிவதற்குமுன் கைப்பேற்றுவோம் இலங்கை ராணுவ தளபதி திடீர் ஆவேசம்" என ஒரு பதிவு பகிரப்பட்டு விவாதத்துக்குள்ளாகி வருகிறது.
இது மகிந்த தரப்பினரது இன்னொரு அரசியல் காய் நகர்த்தல் என்பதை மட்டும் அனைவரும் உணர வேண்டும். இதைச் சொன்ன அதிகாரி யார் என்பதை அறிய வேண்டும்? அவர் யாரோடு இருக்கிறார் என்பதை தெரிய வேண்டும்?
இலங்கை அரசியல் சதியில் மைத்ரியால் மகிந்த பிரதமராக்கப்பட்டார். அதற்கெதிராக மக்கள் பெருவாரியாக வீதிக்கு வந்து அவர்களை நிராகரித்துள்ளார்கள். மகிந்த மற்றும் மைத்ரி மேல் மக்கள் வெறுத்துப் போய் உள்ளார்கள். நாடெங்கும் அவர்களது ஆதரவாளர்களே அவர்களை எதிர்க்க களம் இறங்கியுள்ளார்கள்.
நீதிமன்றமும் அச் செய்கைகளை தவறெனக் கருதி தீர்ப்புகளை வழங்கி வருகின்றன.

இதிலிருந்து சிங்கள மக்களை திசை திருப்ப ஒரே வழி தமிழ் இனவாதத்தை சீண்டுவது. தமிழர்கள் சிங்களவர்களுக்கு எதிராக களம் இறங்குகிறார்கள் எனக் காட்டி மீண்டும் சிங்கள இனவாதிகளை தம் பக்கம் கவர்வது. அதை வைத்து தமது அரசியல் பயணத்தை தொடரலாம் என கனவு காணுகிறார்கள்.
அண்மையில் மட்டக்களப்பு வவுனதீவு எனும் பகுதியில் இரு போலீசார் மாவீரர் நினைவு காலத்தில் கொல்லப்பட்டதற்கு காரணம் அதை வைத்து புலிகள் மீண்டும் எழுந்துவிட்டார்கள் என சிங்கள மக்களை உசுப்பேத்தி தமது அரசியலை தக்க வைப்பதேயாகும்.
ஆனால் அந்த தாக்குதலுக்கு முன்னரே அது குறித்த தகவல்கள் சிங்கள சோசல் மீடியாக்கள் அறிவுறுத்தின. அந்த தாக்குதல் இராணுவத்துக்கு எதிராகவே நடைபெற இருந்தது. பின்னர் போலீசாருக்கு எதிராக மாறியது.
இலங்கையிலுள்ள தமிழரோ அல்லது சிங்களவரோ முன் போல இல்லை. மிகத் தெளிவாக இந்த மாபியா அரசியல்வாதிகளை அறிந்து வைத்துள்ளார்கள். அவர்களை ஒதுக்கி நிராகரித்து வருகிறார்கள்.
எனவே இலங்கையில் புலிகள் எழுகிறார்கள் என்பதோடு தமிழ் நாட்டில் சிங்களருக்கு எதிரான ஒரு போராட்டத்தை உருவாக்கும் தேவையாகவே இந்த கருத்தை தமிழக மக்கள் கவனமாக கருத்தில் கொள்ள வேண்டும். தமிழகத்தின் கொந்தளிப்பை வைத்து இனவாத சிங்களவரை மகிந்த தரப்பு தம் பக்கம் கவர்ந்துவிடலாம் என நினைக்கிறது. அது இலங்கையில் நடக்காது. ஆனால் தமிழகத்தில் சிலர் கொதிக்க வாய்ப்புள்ளது.
ஆனால் தமிழகம் இந்த சதிகார கும்பலின் நோக்கத்தை அறிய வாய்ப்பு அரிது. எனவே இவதானம். இதுபோன்ற செயல்களை ஊக்குவிக்க சுப்ரமணிய சுவாமி மற்றும் மகிந்தவின் பணம் வாங்கி மகிந்தவுக்கு எதிராக போராடும் ஒரு சிலர் தமிழகத்தில் செயல்படுகிறார்கள். சில புலத்திலிருந்து தமிழகத்துக்குள் வந்துள்ள சினிமா தொழில் அதிபர்கள் மற்றும் புலத்து புலிகளும் இதற்கான பணத்தை அள்ளிக் கொட்டுவார்கள். இவர்களுக்கு மகிந்த ஆட்சியில் இருக்கும் தேவையொன்று உள்ளது.
தமது குறுகிய அரசியலுக்காக எந்தக் குப்பைத்தனத்தையும் செய்ய இவர்கள் தயங்க மாட்டார்கள். எந்த மோசமான பரப்புரைகளையும் செய்ய பின் நிற்க மாட்டார்கள்.
அவதானமாக இருப்பது மட்டுமல்ல. இலங்கை சதிகார அரிசியல்வாதிகளுக்காக நடத்தப்படும் இன்னொரு மாபியா பரப்புரை இவை என்பதை சாதாரண மக்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவில் இவர்களால் எதையும் செய்ய முடியாது. இந்தியாதான் இலங்கையை கட்டுப்படுத்துகிறது என்பதே உண்மை. இந்தியாவை மீறி இலங்கை ஒன்றுமே செய்ய முடியாது. அதை சிறு குழந்தைகளே உணர்வர். இந்தியாவோடோ அல்லது தமிழகத்தோடோ மோதும் பலம் இலங்கைக்கு கிடையவே கிடையாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக