திங்கள், 3 டிசம்பர், 2018

ஸ்ரீரெட்டி: பல பெண்களிடம் இருந்து பிரபலங்களின் ரகசியத்தை சேகரிக்கிறேன்

மாலைமலர் : பிரபலங்களின் ரகசிய வாழ்க்கை பற்றிய தகவலை திரட்டி வருவதாக கூறியுள்ள ஸ்ரீரெட்டி, அந்த கதவல் திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி திரையுலகில் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி செக்ஸ் தொல்லை கொடுத்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.< தெலுங்கு நடிகர்கள் ராணாவின் தம்பி, நானி, ராஜசேகர் உள்ளிட்ட பலர் மீதும் பாலியல் குற்றசாட்டுகளை கூறினார். பின்னர் தமிழ் சினிமா பிரபலங்கள் மீதும் புகார் கூறத் தொடங்கினார்.
முன்னணி இயக்குநர் முருகதாஸ், நடிகர்கள் ராகவா லாரன்ஸ், ஸ்ரீகாந்த் சுந்தர்.சி, ஆதி என்று அவரது புகார் பட்டியல் நீண்டது.
Sri Reddy : Every one knows "SIRI" how much famous about the information..even this "sri" also hv lot of information of all big cinema wigs romantic lifestyles..still digging nd taking out the information from the different different girls..it is very much useful to keep in control the movie industry nd we cn save many girls from casting couch..

சென்னையிலேயே செட்டில் ஆன ஸ்ரீரெட்டி தமிழ் படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அவருக்கு வாய்ப்புகள் குவிகின்றன. ஸ்ரீ ரெட்டி முகநூலில் பரபரப்பாக இயங்கி வருகிறார். சில நாட்களுக்கு முன்னர் ஒரு பெரிய ஹீரோ தன்னை அழிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டினார். நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:-

 “எனக்கு எவ்வளவு தகவல் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஸ்ரீக்கும் சினிமாவில் உள்ள பெரிய ஆட்களின் ரகசிய வாழ்க்கை முறை பற்றி அனைத்து தகவல்களும் தெரியும். பல பெண்களிடம் இருந்து இன்னும் தகவலை பெற்றுக் கொண்டிருக்கிறேன்.
திரைத்துறையை கட்டுப்பாட்டில் வைக்க உதவியாக இருக்கும். பட வாய்ப்புக்காக பெண்கள் படுக்கைக்கு அழைக்கப்படுவதை தடுக்க முடியும். இவ்வாறு முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளார். #SriReddy #SriLeaks

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக