சனி, 15 டிசம்பர், 2018

மகிந்தா பதவி விலகினார் .நாளை ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக பதவி ஏற்கிறார்! விடியோ

சற்றுமுன்னர் பதவியை இராஜினாமா செய்தார் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ சற்றுமுன்னர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.கொழும்பு விஜயராம மாவத்தையில் அமைந்துள்ள இல்லத்தில் இடம்பெற்ற சர்வமத அனுஸ்டானங்களை தொடர்ந்து தனது இராஜினாமா கடிதத்தில் கையொப்பமிட்டார்.

tamil.samayam.com :இலங்கை பிரதமராக நாளை மறுநாள் மீண்டும் பதவியேற்கிறார் ரணில் விக்கிரமசிங்கே"
இந்த வழக்கை விசாரித்த 7 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு, இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அறிவித்த அதிபர் மைத்ரிபால சிறிசேனாவின் உத்தரவு அரசியல் சட்ட விரோதமானது. நான்கரை
ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றத்தை கலைக்க முடியாது.
 முன்னரே கலைக்க வேண்டும் என்றால் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு தேவை. இதனால் இலங்கை நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது என நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர்.
இந்நிலையில் நாட்டின் ஸ்திரத்தன்மையை கருத்தில் கொண்டு, முன்னாள் அதிபர் ராஜபக்சே தனது பிரதமர் பதவியை நாளை ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளார். நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பின்னர் அவர் பதவி விலகுவார்.

 இலங்கை மக்கள் கட்சியும், இலங்கை சுதந்திரா கட்சியும், மற்றவர்களுடன் இணைந்து அதிபர் சிறிசேனாவுடன் இணைந்து மிகப் பெரிய கூட்டணியை அமைக்க பாடுபடுவார்கள் என்று நமல் ராஜபக்சே தனது ட்விட்டரில் பதவிட்டுள்ளார். நாளை ராஜபக்சே பதவி விலகவுள்ள நிலையில், நாளை மறுநாள் காலை 10 மணிக்கு ரணில் விக்கிரமசிங்கே இலங்கை பிரதமராக மீண்டும் பதவியேற்கவுள்ளார். முன்னதாக இலங்கை அதிபர் சிறிசேனா மற்றும் ரணில் இருவரும் தொலைப்பேசி வாயிலாக உரையாடியதாகவும் அதன்மூலம் இந்த பதவியேற்பு நிகழ்வு முடிவு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக