வெள்ளி, 21 டிசம்பர், 2018

தயாரிப்பாளர் சங்க கட்டிட சீல் உடைக்கப்பட்டது ! விசால் வருகை ... பிந்திய செய்தி

தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவு!NDTV : தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தயாரிப்பாளர் சங்கம் சார்பில், நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவிவகித்து வரும் விஷாலுக்கு எதிராக சங்க உறுப்பினர்கள் போர்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நிர்வாகம் சரியாக செயல்படவில்லை என கூறி சங்க வளாகத்தில் உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அலுவலகத்தைப் பூட்டிச்சென்றனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் தயாரிப்பாளர் சங்கத்துக்குப் போடப்பட்ட பூட்டை உடைத்து, உள்ளே செல்ல முயன்றார். இச்சம்பவத்தின் போது காவல்துறைக்கும் விஷாலுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து விஷால் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுவிக்கப்பட்டார்.
இந்த விவகாரம் சங்கம் தொடர்புடையது என்பதால் இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமாய், வருவாய் துறையினருக்கு காவல்துறையினர் பரிந்துரை செய்தனர். இதன் காரணமாக சங்க விதிகளுக்கு உட்பட்டு தயாரிப்பாளர் சங்கம் செயல்படுகிறதா? என்பதை ஆய்வு செய்ய பதிவுதுறை அதிகாரிகள் அண்ணாசாலை அலுவலகத்திலும் விசாரணை நடத்தினர்.
பின்னர் அண்ணாசாலை அலுவலகத்திற்கு சீல் வைக்கபபட்டது. இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு சீல் வைக்கப்பட்டது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் விஷால் தரப்பு வழக்கு தொடர்ந்தனர்.
இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விஷால் தரப்பு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு போடப்பட்ட சீலை அகற்றுமாறு வருவாய் கோட்டாட்சியர், பதிவாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக