திங்கள், 17 டிசம்பர், 2018

வைகோ திருமாவளவன் ரஜினி வடிவேலு சத்ருங்கன் சின்ஹா நாசர் பிரபு கலைஞர் சிலை திறப்பு விழா..


நக்கீரன் : ரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். அதன் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ தேசிய தலைவர்களின் புடைசூழ, கருணாநிதி சிலைத் திறப்பு விழாவை வெற்றிகரமாக அரங்கேற்றியிருக்கிறார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். நீண்ட நாட்களாக தமிழகம் பக்கமே தலை வைத்துப்படுக்காமல் இருந்த சோனியா காந்தியை, சிலை திறப்பை காரணமாக வைத்து, சென்னைக்கு வர வைத்து காங்கிரசுடனான கூட்டணியை சிமென்ட் பூசி மேலும் பலப்படுத்தி இருக்கிறார் ஸ்டாலின்.
இவையனைத்தையும் விட, ‘ராகுல் காந்தியே வருக… நாட்டை காத்திட வருக…’ என்று பிரதமர் வேட்பாளராகவே நேரடியாக அத்தனை தலைவர்களின் முன்பு பிரகடனப்படுத்தி இருக்கிறார். அனேகமாக, தேசிய அளவில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முதலில் முன்மொழிந்த தலைவர் ஸ்டாலினாகத் தான் இருக்க முடியும்.
முன்னதாக, அண்ணா அறிவாலயத்தில் நடந்த கலைஞர் சிலை திறப்பு விழாவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்ள, ரஜினி, பிரபு, வடிவேலு, நாசர் உட்பட பல்வேறு திரைப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். கமலஹாசன் கஜா புயல் பாதிப்பை பார்க்க போவதால் கலந்து கொள்ளவில்லையாம் . அதன் ஸ்பெஷல் புகைப்படத் தொகுப்பு இதோ,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக