செவ்வாய், 18 டிசம்பர், 2018

பிரதமர் மோடி ரூ. 6590 கோடிகளில் வெளிநாட்டு பயணங்கள் + விளம்பரங்கள் .. தமிழக ஊடகங்கள் ஆழ்ந்த நித்திரையில்

Adv Manoj Liyonzon : இந்திய பிரதமர் நரேந்திர மோடி ரூ. 6590 கோடிகளில்
வெளிநாட்டு பயணங்கள் மற்றும் விளம்பரங்கள் மேற்கொண்டிருக்கிறார் என்று செய்திகள் வருகின்றன.
இதை வடநாட்டு ஊடகங்கள் வருத்தெடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் தமிழக ஊடகங்கள் ஆழ்ந்த நித்திரையில் குப்புறப்படுத்து களிகூர்ந்து கொண்டிருக்கின்றன. நாமாவது இதை அலசுவோம்.
ஜனநாயக குடியரசு நாடான இந்தியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதமர் என்னென்ன காரணங்களுக்காக வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம் என்று சில நெறிமுறைகள் இருக்கிறது
அவை 1). வெளியுறவு கொள்கைகளை மேம்படுத்த; 2). பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்த; 3). பெருவாரியான மக்கள் வகிக்கும் பொருளாதார நிலையை வளர்ச்சியடையச் செய்யும் வகையில் 3அ).வர்த்தக சமநிலை (Balance of Trade), 3ஆ).கட்டண சமநிலை (Balance of Payment), 3இ).பொருட்கள் அல்லது சேவை பரிமாற்றம் (Exchange of Goods or Service) ஒப்பந்தங்கள் செய்ய, 4). பன்னாட்டு உடன்படிக்கைகள், தொடர்பாக மட்டும் தான் இந்திய பிரதமர்கள் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளலாம். இந்த நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும்போது தான் மக்கள் பணத்தை செலவு செய்ய வேண்டும்

ஆனால் நரேந்திர மோடி மேற்கூறிய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை அவர் மேற்கூறிய காரணங்களுக்காக வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டிருந்தால் அந்த ஒப்பந்தங்கள் பொது மக்கள் பார்வைக்கு வந்திருக்கும். அதை நிரூபிக்கும் வகையில் பல பொருளாதார மாற்றங்களும் முன்னேற்றங்களும் இந்தியாவில் நிகழ்ந்திருக்கும். ஆனால் அப்படி எந்த நல்லதுமே நடக்கவில்லை
பிறகெதற்கு மக்கள் பணத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார் என்ற கேள்வி எழத்தானே செய்யும்.
அது அம்பானி அதானி மிட்டல் போன்ற தனியார்களுக்கு வியாபார ஒப்பந்தங்கள் வாங்கிக் கொடுக்கத்தான். சரி அதன் மூலம் நாட்டுக்கு வரிவருவாய் கிடைக்குமே என்று சிலர் முட்டாள்தனமாக வாதிடுவார்கள்.
ஆனால் இந்த தனியார்கள் இரட்டை வரி ஒப்பந்தங்கள் (Double Taxation Treaties) மூலம் நமது நாட்டிற்கு வரி செலுத்தாமலோ அல்லது Foreign Inward Remittance அடிப்படையில் அந்நிய செலாவணி என்ற காரணத்தைக் காட்டி வரி மானியம் (Tax Subsidy) பெற்று குறைந்த அளவில் மட்டும் வரி செலுத்தி தப்பித்து, பெரும்பணத்தை சேர்த்துக் கொள்வார்கள். இதனால் நமது நாட்டிற்கு எந்த நன்மையும் இல்லை. மாறாக மக்கள் பணம் தான் வீணடிக்கப்பட்டுள்ளது, அதுவும் கொஞ்சநஞ்சமல்ல, ரூ. 6590 கோடிகள்.
இது கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள பல சிறு மாநிலங்களின் ஆண்டு பட்ஜெட்டுக்கு நிகராகும். இவ்வளவு பெரிய பொருட்செலவில் தனியார் நலன்களுக்காக மக்கள் பணத்தில் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியம் என்ன.!?
இப்படி மக்கள் பணத்தை தனியார் நலன்களுக்காக வீணடிப்பது தேச விரோதம் இல்லையா!?
மக்கள் விரோதம் இல்லையா!? ஜனநாயக விரோதம் இல்லையா.!?
இந்த கூட்டம் தான் தேசவிரோத கூட்டம்
இந்த கூட்டம் தான் மக்கள் விரோத கூட்டம்
இந்த கூட்டம் தான் ஜனநாயக விரோத கூட்டம்
இத்தகைய மாபாதக கூட்டத்தை அரசியல் அனாதைகள் ஆக்கி, நமது தேசத்தை காப்பாற்றுவது நம் அனைவரது கடமையாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக