சனி, 15 டிசம்பர், 2018

கரும்பலகையில் பெயர் எழுதியதால் 5 மாணவிகள் தற்கொலை முயற்சி,, விழுப்புரம்

வெப்துனியா :விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள அரசம்பட்டி மேல்நிலைப்பள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்கள் அதே பள்ளியில் 12 ஆம் வகுப்பில் படித்து வரும் மாணவிகள் சிலரை மாணவர்களுடன் தொடர்பு படுத்தி கேலி செய்யும் விதத்தில் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதைக் கண்ட மாணவிகள் 5 பேர் மிகவும் வருத்தமடைந்தார்கள்.இதனையடுத்து மாணவிகள் 5 பேரும் பள்ளி இடைவேளையின் போது வீட்டுக்கு சென்று எலி மருந்தை தின்றுள்ளனர். இதனையடுத்து மாணவிகள் ஐந்து பேரும் வாந்தி எடுத்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவர்களை சங்கராபுரம் அரசு மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது நல்லபடியாக வீட்டுக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதுகுறிந்து சங்கராபுரம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக