திங்கள், 3 டிசம்பர், 2018

அலகாபாத்தில் 3 மாதங்கள் திருமணங்களுக்கு தடை: யோகி ஆதித்யநாத் உத்தரவு

tamilthehindu.: உத்தரப்பிரதேச மாநிலம், அலகபாத் எனப்படும் பிரயாக்ராஜில் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள் கும்பமேளா நடைபெறுகிறது. அலகாபாத கும்பமேளாவுக்காக சிறப்பு ஏற்பாடுகளை உத்தரப் பிரதேச அரசு செய்து வருகிறது.
அப்போது அங்கு ஏராளமான மக்கள் திரண்டு கங்கை உள்ளிட்ட நதிகளில் புனித நீராடுவார்கள். உத்தரபிரதேசம் மட்டுமின்றி நாடுமுழுவதும் பல பகுதிகளில் இருந்து பல லட்சம் பேர் அங்கு தங்கி புனித நீராடுவர். குறிப்பாக, அங்கு முக்கிய நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். பல பகுதிகளில் இருந்து மக்கள் வந்து தங்கிச் செல்வதற்காக, திருமண மண்டபங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுபோலவே ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் முழுவதும் கும்பமேளாவுக்கு வருபவர்களுக்காக முன்னுரிமை கொடுத்து ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அப்போது திருமணங்கள் நடத்தினால் அவர்கள் தங்குவதற்கு பாதிப்பு ஏற்படும். எனவே ஜனவரி முதல் மார்ச் வரை 3 மாதங்கள், அலகாபாத்தில் திருமணம் நடத்த தடை விதித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

எனவே மாவட்ட நிர்வாகம் அனைத்தும் திருமண மண்டபங்கள் மற்றும் ஓட்டல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு அரசாணை அனுப்பியுள்ளது. அதில் மேற்கண்ட 3 மாதங்கள் திருமணம் நடத்தவோ, ஹோட்டல்களில் தங்கவோ முன்பதிவு செய்திருந்தால் அதை ரத்து செய்யும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக