வெள்ளி, 14 டிசம்பர், 2018

சதிஸ்கார் 31% பட்டியல் பழங்குடி மக்கள் வாக்குகளை தவற விட்ட மாயாவதி .. 25 ரிசர்வ் தொகுதிகள். பெற்றது..?

Don Vetrio Selvini : சத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள பட்டியல் மற்றும்
பழங்குடியினர் எண்ணிக்கை 31%. இந்த மாநிலத்தில் மொத்தம் 25 ரிசர்வ் தொகுதிகள். இந்த, 25 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட மாயவதியின் பிஸ்பி கட்சி வெற்றிபெறவில்லை.ஒரே ஒரு இடத்தில் மட்டும் இரண்டாம் இடம் வந்துள்ளது. மற்ற இடங்களில், 3ம் இடத்துக்கு கீழ் தள்ளப்பட்டுள்ளது.ஒட்டு மொத்தமாக கிட்டத்தட்ட 4% வாக்குகளை வாங்கியிருக்கிறது.
இந்த 25 தொகுதிகளிலும் 90% இடங்களை காங்கிரசும், 10% இடங்களில் பிஜேபியும் வெற்றி பெற்றுள்ளன. மக்கள் தேசிய கட்சிகளை, ஏன் பிஜேபிக்கு கூட வாக்களிக்கிறார்கள், ஆனால் பிஸ்பியை புற்கணிக்கிறார்கள். இத்தணைக்கும் சத்திஸ்கர் என்பது உத்திர பிரதேசத்தின் அருகில் இருக்கும் மாநிலம்.

இப்படி பக்கத்து மாநிலத்திலேயே செல்வாக்கில்லா ஒரு கட்சியை, தமிழ் நாட்டில் தலித்துகள் ஆதரிக்க வேண்டும் என்று ரஜினியை வைத்து புரட்சி பேசிய இயக்குனர் ரஞ்சித் போன்றவர்கள் வலியிருத்துகிறார்கள். எந்த அடிப்படையில் இப்படி சொல்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக