வெள்ளி, 21 டிசம்பர், 2018

ஃபரூக் அப்துல்லா : காஷ்மீரில் ஆட்சி அமைத்த 30 நாட்களில் மாநில சுயாட்சி

farooqதினமணி : ஜம்மு-காஷ்மீரில் ஆட்சிக்கு வந்தால் 30 நாட்களுக்குள் பிராந்திய சுயாட்சி ஏற்படுத்தப்படும் என ஃபரூக் அப்துல்லா உத்தரவாதம் அளித்துள்ளார். இதுதொடர்பாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா, வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஆளுநர் மற்றும் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும். இங்கு தேர்தல் நடத்தப்பட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சி நடைபெற வேண்டும்.
இங்குசட்டப் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டு அதில் தனிப்பெரும்பான்மையுடன் தேசிய மாநாட்டுக் கட்சி ஆட்சிக்கு வந்தால், 30 நாட்களுக்குள்ளாக பிராந்திய சுயாட்சி அமல்படுத்தப்படும் என்று நான் உறுதியளிக்கிறேன்.

அதுதொடர்பாக பேரவையில் தாக்கல் செய்யவதற்கான ஆவணங்கள் தயார் நிலையில் உள்ளன. அதில் ஒவ்வொரு பகுதிக்கும் சில சிறப்பம்சமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியுள்ளது. அப்போதுதான் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான பிரதிநிதித்துவம் கிடைக்கும் என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக