வியாழன், 27 டிசம்பர், 2018

2வது நாளாக தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்-. மயங்கி விழும் ஆசிரியர்கள்..டிபிஐ வளாகத்தில் பரபரப்பு

கைது நடவடிக்கை அடுத்தடுத்து மயக்கம் tamil.oneindia.com - Keerthi.: சென்னை : சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் அடுத்தடுத்து மயங்கி விழுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் தமிழக அரசு பள்ளிகளில் 2009ம் ஆண்டு மே 31-ந் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கும், அதன் பிறகு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடு காணப்படுகிறது.
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர் அரசுக்கு கோரிக்கை வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு நேற்று முன்தினம் போராட்டத்தை தொடங்கினார்கள்.அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர். 2 அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தங்க வைத்தனர். 2வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்ததால், செவ்வாய் கிழமை 16 ஆசிரியர்கள் மயங்கி விழுந்தனர்.

அவர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். பின்னர் ஆசிரியர்கள் அனைவரையும் விடுவித்த போலீசார், கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டனர்.

இன்று 3-வது நாளாக அவர்கள் போராட்டம் நீடித்தது. போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் இன்று மேலும் 6 பேர் மயக்கம் அடைந்தனர். தினகரன் வந்தார் மொத்தம் 36 பேர் மயக்கம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

மற்ற ஆசிரியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இடைநிலை ஆசிரியர்களை அவர் சந்தித்தார். போராட்டத்தில் அவர்கள் முன்னெடுத்துள்ள கோரிக்கைகள் குறித்து விரிவாக கேட்டுக்கொண்டார். கோரிக்கைகளை நிறைவேற்றுவோம் பின்னர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளின் உறுதியை அரசு நிறைவேற்றவில்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 48 பெண்கள், 24 ஆண்கள் மயக்கம் அடைந்து உள்ளனர். அமமுக ஆட்சிக்கு வந்த பிறகு இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக