சனி, 22 டிசம்பர், 2018

2 ஜி போலி வழக்கால் அதிகம் இழந்தது தமிழகம்தான்.. ஆர் எஸ் எஸ் + தமிழ் தேசியர் + காப்பறேட் கூட்டுசதி..

Kathir RS : ஆ.ராசா பிறந்து வளர்ந்த பெரம்பலூர்
மாவட்டம் வேலூர் கிராமத்தில்
ஒரு தபால் அலுவலகம் கூட இல்லை, ஆனால் மத்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக உயர்ந்தவர்.
கடந்த ஆண்டு இதே நாளில்தான்,
2ஜி வழக்கு புனையப்பட்ட பொய்யான வழக்கு என்று தீர்ப்பு சொல்லப்பட்டது..

இந்தத் தவறான குற்றச்சாட்டால் 7 ஆண்டுகள் தனது அரசியல் வாழ்க்கையை இழந்திருக்கிறார் ஆ.ராசா.
திஹார் சிறையில் கிடந்திருக்கிறார்.கட்சி மூன்று தேர்தல்களில் தோற்றிருக்கிறது. அதன் பயனாக இன்று மத்தியிலும் மாநிலத்திலும் கேவலமான ஆட்சி நடந்து வருகிறது.
சீமான் திருமுருகன் போன்ற சில்லரைகள் குரலை உயர்த்தி பேசத் தொடங்கிவிட்டனர்.
இலங்கை யுத்தத்தின் போது ஸ்திரமான முடிவுகளை எடுக்க விடாமல் கார்னர் செய்ததும் இந்த வழக்குதான்.
எதிர்கட்சிகள்,ஊடகங்கள் லெட்டர் பேட் கட்சிகள் போனவன் வந்தவன் எல்லோருக்கும்
கலைஞர் மீதும் கட்சியின் மீதும் உச்ச பட்ச காழ்ப்பு உருவாக காரணமாக இருந்த வழக்கு.
இதுதான் சரியான வாய்ப்பு என திட்டமிட்டே வெறுப்பை வளர்த்தனர்.
கலைஞர் ராசா கனிமொழி ஆகியோரைப் பற்றிய அருவருப்பான பிரசாரங்களை உருவாக்கினர்.

அதற்குள் இணையமும் துணைவர உச்சபட்ச அவமதிப்புகள் நடந்தன.அவதூறுகள் விஷம புன்னகையுடன் பரப்பப்பட்டன.இன்று வரை இவை நடந்துதான் வருகிறது.
அரசியல் ரீதியாக எதிரிகள் திமுகவை வென்றனர்.
ஆனால் இணையத்தில் மட்டும் திமுக திருப்பி அடித்தது.இன்று வரை தர்க்கரீதியாக பதிலளித்து எதிரிகளை வெளுத்து வருகிறது.
இதில் நேரடியாக கட்சி இறங்கவில்லை ஆனால் திமுகவிற்கு உண்மையான ஆதரவாளர்களால் இந்த சமர் தொடர்ந்து நடந்து வருகிறது.
நன்றாக எண்ணிப்பாருங்கள்.
இந்த போலி வழக்கால் அதிகம் இழந்தது தமிழகம்தான்.இன்று வரை அதன் பலனை அனுபவித்து வருகிறோம்.
மத்தியில் மாறிய ஆட்சியால் இந்தியாவும் நன்றாக அனுபவிக்கிறது.
முடிந்து போன அந்த 7 வருடங்கள் இனி திரும்பப் போவதில்லை.
ஆனால் இந்த 7 ஆண்டுகளின் தாக்கம் பின்வரும் இருபது வருடங்களுக்கு இருக்கும்.
எதிர் வரும் தலைமுறை நம் எல்லோரையும் நிச்சயம் காறி துப்பும்..
இன்று வரை ஒரு முட்டாள் தலைமுறையாக வாழ்ந்து கொண்டிருப்பதற்காக

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக