திங்கள், 17 டிசம்பர், 2018

மத்திய பிரதேசம் காங்கிரஸ் அதிரடி ! விவசாய கடன் தள்ளுபடி: கமல்நாத் முதல் கையெழுத்து

மத்திய பிரதேசத்தில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. முதல்வராக பதவியேற்ற கையோடு அம்மாநில முதல்வர் கமல்நாத் அதிரடியாக கடன்களை தள்ளுபடி செய்துள்ளார். தேர்தல் பிரச்சாரத்தின் போதே விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தது காங்கிரஸ். அதேபோல் ரூ.2 லட்சம் வரையிலான கடன்கள் முதற்கட்டமாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
தினமலர் :போபால்: ம.பி. முதல்வராக பதவியேற்ற கமல்நாத், ரூ. 2 லட்சம்
வரை விவசாய கடனை தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டார்.
ம.பி. மாநில சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங். பெரும்பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது. முதல்வராக கமல்நாத் இன்று ( டிச.17) பதவியேற்றார். அவருக்கு கவர்னர் பதவிபிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிலையில் கடந்த சிலநாட்களுக்கு கமல்நாத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டபோது , தாம் முதல்வராக பதவியேற்றவுடன் 10 நாட்களில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன் என உறுதியளித்திருந்தார்..
அதன்படி இன்று பதவியேற்ற கமல்நாத், முதல்வாராக தனது முதல் கையெழுத்தாக ரூ. 2 லட்சம் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்து கையெழுத்திட்டார்.
இது குறித்து அவர் அளித்தபேட்டியில், தேர்தல் முன்னர் விவசாயிகளுக்கு நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக