செவ்வாய், 25 டிசம்பர், 2018

2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? காங்கிரஸ் 140 ? கூட்டணி கட்சிகள் 200? ...

Swathi K : 2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்? (Please check the image for detailed
report)
எனது தனிப்பட்ட கணிப்பு இது. இன்றைய நிலையில் இருந்து 2019 தேர்தலை பார்க்கும் போது முடிவுகள் எப்படி இருக்கும்..
இந்த கணிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தல்கள் , கல்லூரி/ பல்கலை தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், சட்டசபை தேர்தல்கள், இப்போதுள்ள கூட்டணி சூழல் மற்றும் கட்சிகளின் ஓட்டு சதவிகிதம் வளர்ச்சி/ வீழ்ச்சி இதையெல்லாம் ஆய்வில் கொண்டு கணிக்கப்பட்டது.. ஜனவரி கடைசி வாரத்தில் அடுத்த கணிப்பு (கூட்டணி மாறினால் மட்டும்!!..)
1. தற்போதுள்ள சூழ்நிலையில் கட்சிகளின் கூட்டணிகள் நிலை என்ன? (இன்றைய நிலையை கருத்தில் கொண்டு..)
UPA - Congress + DMK(TN) + TDP(Andhra) + NCP(Maharastra) + RJD(Bihar) + JDS(Karnataka) + JMM(Jharkhand) + Communist (statewide decision) + Small parties.
Assumptions:
1. Akilesh's SP, Mayawathi's BSP & Mamta's Trinamool won't alliance with Congress before election. SP & BSP pre-poll alliance is for sure, that will enough to beat BJP in UP.
2. Post-poll alliance (for sure) - SP, BSP & Trinamool with UPA
NDA - BJP + Nitish's JDU(Bihar) + Ram Vilas Paswan's LJP(Bihar) + Shiromani Akali Dal (Punjab) + Small parties.
Assumption:
1. Shiv Sena, ADMK won't alliance with BJP before election.
2. Post-poll alliance possibility - Shiv Sena, ADMK, YSR Congress, TRS & BJD with NDA
2. 2019 தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

UPA (காங்கிரஸ்+): 198-218 (காங்கிரஸ்க்கு தனியாக 155 இடங்கள் வரை கிடைக்கலாம்). கேள்வி 1ல் இருக்கும் கூட்டணி கட்சிகள் மட்டும் சேர்த்து..
NDA (பிஜேபி+): 180-200 (பிஜேபிக்கு தனியாக 150 இடங்கள் வரை கிடைக்கலாம்).. கேள்வி 1ல் இருக்கும் கூட்டணி கட்சிகள் மட்டும் சேர்த்து..
மற்றவர்கள் (தேர்தலுக்கு முன் UPA & NDAவில் இல்லாதவர்கள்): 142-162
கூட்டணி மாறினால் மேலே உள்ள நம்பர் மாற வாய்ப்புள்ளது.. ஆனாலும் மேலே உள்ள எண்களை விட காங்கிரஸ் கூட்டணி அதிகம் வாங்கவே வாய்ப்பிருக்கிறது.. குறைய வாய்ப்பில்லை.. நாட்கள் செல்ல செல்ல ஆளும் கட்சி மீது அதிருப்தி அதிகமாக வாய்ப்புள்ளது.. + மோடியால் தனது பேச்சின் மூலம் ஓட்டை கவரும் வித்தையும் போச்சு.. அவர் இனி என்ன பேசினாலும் மக்களுக்கு அது பொய்யாக, காமெடியாக தான் தெரியும்.. பிஜேபி கோட்டையிலேயே இது தான் கதை என்றால்.. மற்ற மாநிலங்களில் கேக்கவேண்டாம்..
தேர்தல் நெருங்க நெருங்க நான் சொன்னதில் பிஜேபி எண்ணிக்கை குறைந்து காங்கிரஸ் எண்ணிக்கை கூட வாய்ப்பிருக்கிறது.. ஆனால் பிஜேபி எண்ணிக்கை கூட வாய்ப்பேயில்லை
3. தேர்தலுக்கு பின்பு கூட்டணி எப்படி இருக்கும்?
காங்கிரஸ் கூட்டணியில் மாயாவதி, அகிலேஷ், மம்தா மற்றும் சில சின்ன கட்சிகள் இருப்பார்கள்.. பிஜேபியை ADMK, ஜெகன் மோகன் YSR காங்கிரஸ், சந்திர சேகர் ராவ் TRS, சிவசேனா போன்ற கட்சிகள் ஆதரிக்கலாம் தேவைப்பட்டால்.
4. யார் ஆட்சி அமைக்க வாய்ப்பிருக்கிறது?
காங்கிரஸ் தலைமையில் கூட்டணி ஆட்சி. அதில் மாயாவதி, அகிலேஷ், மம்தா எல்லோரும் தேர்தலுக்கு பின்பு ஆதரவு கொடுப்பார்கள். காங்கிரஸ் முக்கியமான அமைச்சர்கள் பதவிகளை கூட்டணிக்கு கொடுத்தாவது ராகுல் காந்தியை பிரதமர் ஆக்க முயற்சிப்பார்கள்.
5. காங்கிரஸ் கூட்டணியில் மம்தா, அகிலேஷ் & மாயாவதி வர வாய்ப்பிருக்கிறதா தேர்தலுக்கு முன்?
இப்போது இருக்கும் நிலையில் தேர்தலுக்கு முன் அவர்கள் வருவதற்கு வாய்ப்பு குறைவாக தெரிகிறது. ஆனால் தேர்தலுக்கு பின்பு 100% காங்கிரஸ் கூட்டணியை ஆதரிப்பார்கள்.
6. அகிலேஷ் & மாயாவதி கூட்டணி இல்லாமல் காங்கிரஸ் தேர்தலை சந்திப்பது பாதிப்பா காங்கிரஸ்க்கு?
ஆமாம்.. ஆனால் இப்போதுள்ள நிலையில் உத்திர பிரதேசத்தில், 1) காங்கிரஸ் போட்டியிடும் சில தொகுதிகளில் BSP & SP போட்டியிடாது போல தெரிகிறது. 2) அதே போல் காங்கிரஸ் கட்சியும் எல்லா தொகுதியிலும் உத்திர பிரதேசத்தில் நிற்கப்போறதில்லை 3) தேர்தலுக்கு பின்பு காங்கிரஸ் கட்சியை தான் சப்போர்ட் செய்வோம் என்ற உடன்பாடு முன்பே எடுக்கப்பட்டது தான்.. ஓட்டு பிரிவதால் ஒரு சில தொகுதிகள் பிஜேபிக்கு அதிகம் கிடைக்கலாம்..
மாயாவதி/ அகிலேஷ் தேர்தல் முடிவுக்கு பின் அவர்களின் தேவை கண்டிப்பாக காங்கிரெஸ்க்கு தேவை அப்போது அதிகம் டிமாண்ட் செய்யலாம் என்று நினைத்து தேர்தலுக்கு முன்பு கூட்டணி வேண்டாம் என்று நினைத்து இருக்கலாம்.. எப்படியோ உத்திர பிரதேசத்தில் SP/ BSP கூட்டணியில் கிடைக்கும் தொகுதிகள் எண்ணிக்கை காங்கிரஸ் கூட்டணிக்கு தான்.
7. தமிழ்நாட்டில் பிஜேபி நிலை?
** தேர்தலுக்கு முன் பிஜேபியுடன் யாரும் கூட்டணி வைக்கவாய்ப்பில்லை என்று தெரிகிறது.. தேர்தலுக்கு பின் ADMK/ தினகரன் தேவைப்பட்டால் பிஜேபிக்கு சப்போர்ட் செய்வார்கள்.. ஒரு வேளை பிஜேபி+ADMK கூட்டணி அமைந்தால்.. அது அனைத்து இடங்களிலும் தோற்கும்..
** ரஜினி - பாராளுமன்ற தேர்தலுக்கு வர வாய்ப்பில்லை..
** கமல் - காங்கிரஸ், தி.மு.க கூட்டணியில் அவர் நினைத்த சீட் கிடைத்தால் சேர வாய்ப்பிருக்கிறது..
** தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி 35 இடங்கள் வரை வெற்றி பெறலாம்.. ஒரு வேளை பிஜேபி, ADMK தேர்தலுக்கு முன் கூட்டணி வைத்தால், DMK/ காங்கிரஸ் கூட்டணி எல்லா இடத்திலும் கூட வெற்றி பெறலாம்..
8. மோடி அலை இல்லையா?
2014ல் மோடி அலை (ஆயிரக்கணக்கான கோடிகள் செலவுசெய்து செயற்கையாக உருவாக்கப்பட்டது) இருந்தது.. பிஜேபியின் பொய்யான விளம்பரங்கள், காங்கிரஸ் ஆட்சியின் மேல் மக்களுக்கு வந்த சலிப்பு, மோடி அலை இந்த மூன்றும் சேர்ந்து தான் 2013-2016 வரை பிஜேபியின் வெற்றிக்கு உதவியது.. இனி அதற்க்கு வாய்ப்பே இல்லை. மோடியால் எப்படி பிஜேபி வெற்றி பெற்றதோ.. அப்படியே அதற்க்கு எதிராக மோடியால் தான் பிஜேபி தோற்க்கவும் போகிறது.
9. 2014ல் இருந்து எந்தெந்த மாநிலங்களில் பிஜேபி வளர்ச்சி கண்டுள்ளது?
பிஜேபி நிறைய வெற்றி பெற்றது போல தெரிந்தாலும்... 2014யை ஒப்பீடு செய்யும் போது.. வடகிழக்கு மாநிலங்களில் மட்டும் தான் பிஜேபி நன்கு வளர்ச்சி கண்டுள்ளது கடந்த சில வருடங்களில்.. ஆனால் அங்கு பாராளுமன்ற தொகுதிகள் குறைவு.. மற்ற முக்கியமான மாநிலங்களில் எல்லாம் பிஜேபிக்கு வோட்டு வங்கி மாபெரும் சரிவு 2014யை ஒப்பீடு செய்யும் போது..
10. யாரெல்லாம் பிஜேபிக்கு ஓட்டு போட மாட்டார்கள்??
முதல் முறை ஓட்டு போடும் இளைய தலைமுறை (15-20% of total voters) தான் மோடியை சென்றமுறை வெற்றி பெற வைத்தார்கள்.. மோடி வந்தால் இந்தியா வல்லரசு ஆகும் என்று நம்பிய படித்த அரைவேக்காடு மக்கள் தான் அதிக அளவில் மோடிக்கு ஓட்டு போட்டார்கள்.. 2019ல் முதல்முறை ஓட்டு போடும் 80% மக்கள் பிஜேபிக்கு வோட்டு போட வாய்ப்பில்லை.. விவசாயிகள், சிறு/ குறு தொழில்கள் செய்வோர் அவருக்கு வோட்டு போட வாய்ப்பில்லை.. இதோடு சிறுபான்மை மக்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.. இந்துக்கள் அதிகம் உள்ள மத்திய பிரதேஷ், சட்டிஸ்கர் & ராஜஸ்தானிலேயே பிஜேபியின் மத அரசியல் எடுபடவில்லை.. எனவே இந்த ராமர் கோவில், ராமர் சிலை எல்லாம் எடுபட போவதில்லை பிஜேபிக்கு..
எனக்கு நிஜமா தெரியல.. இவ்வளவு கேவலமான போட்டோஷாப், போலியான ஆட்சியை பார்த்தபின்பு.. யார் மோடிக்கு ஓட்டு போடுவார்கள் என்று தெரியல.. ஒருவேளை இன்றும் மோடியின் பொய்யான விளம்பரங்களையும் அவரின் பக்தர்கள் அனுப்பும் பொய்யான வாட்ஸாப், முகநூல் பதிவுகளையும் உண்மை என்று நம்பும் ஒரு கூட்டம் எப்போதும் உண்டு.. அந்த கூட்டத்தின் ஓட்டுக்கள் எப்போதும் மோடிக்கு உண்டு.
ஜனவரி கடைசி வாரத்தில் அடுத்த கணிப்பு (கூட்டணி மாறினால் மட்டும்!!..)
2019 will be similar or sligtly better than 2004 results for Congress.
Please check the image.
- Swathi K

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக